உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

141

இஃது ஏழடிப் பஃறொடை வெண்பா. பல தொடைகளால் வருவது பஃறொடை வெண்பா. ஈரடி ஒன்றாகத் தொடுக்கப்படுவது தொடையாகும்.

பாவினம்

உ. கட்டளைக் கலித்துறை

75. ஒவ்வோர் பாவிற்கும் துறை, தாழிசை, விருத்தம் என மும்மூன் றினச் செ-யுள்கள் உள. அவற்றுள் கலிப்பாவிற்குரிய துறை கலித்துறை யெனப் படும். அது நெடிலடி நான்கா- வரும்.

76. கலித்துறை கட்டளை பெற்றுவரின் கட்டளைக் கலித்துறை யெனப்படும்.

கட்டளை - நியதி, வரையறை.

77. நெடிலடி நான்கு வந்து, அடிதோறும் முதல் நான்கு சீரும் வெண் டளை தட்டுக் கடைச்சீர் கருவிளங்கா-, கூவிளங்கா- என்னும் சீர்களில் ஒன்றாகி. ஒவ்வோர் அடியிலும் நேரசை முதலாயின் பதினாறெழுத்தும் நிரையசை முதலாயின் பதினேழெழுத்தும் இருப்பின் கட்டளைக் கலித் துறையாம்.

எழுத்தெண்ணும்போது ஆ-தமும், மெ-யும் நீக்கி யெண்ணப்படும்.

உ-ம்.

நேர்முதல்

வாதுற்ற திண்புய ரண்ணா மலையர் மலர்ப்பதத்தைப் போதுற்றெப் போதும் புகலுநெஞ் சேயிந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென் தேடிப் புதைத்த திரவியமென் காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே.

நிரைமுதல்

பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை பிறந்துமண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில் குறிக்குமிச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியா திறக்குங் குலாமருக் கென்சொல்லு வேன்கச்சி ஏகம்பனே.

இவற்றிற் கட்டளைக் கலித்துறைக்குரிய தளையும் சீரும் எழுத் தெண்ணிக்கையுங் கண்டுகொள்க. இரண்டாஞ் செ-யுளின் ஈற்றுச் சீர் மகர மெ- நீக்கிக் கூவிளங்காயாகக் கொள்ளப்படும்.