உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இயற்றமிழ் இலக்கணம்

அணியியல்

வேற்றுமையணி

78. வேற்றுமை யணியாவது உபமான உபமேயங்கட்கு ஒருவகை யில் ஒற்றுமை கூறி மற்றோர் வகையில் வேற்றுமை கூறுவது. இதை வட மொழியில் 'வியதிரே காலங்காரம்' என்பர்.

உ-ம்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

இதில் தீயினாற் சுட்டபுண் உபமானம்; நாவினாற் சுட்ட வடு உப மேயம். ரண்டும் புண்ணளவில் ஒன்றேயாயினும் தீயினாற் சுட்டது ஆறு மென்றும் நாவினாற் சுட்டது ஆறாதென்றும் வேறுபடக் கூறியவாறு காண்க.

வேற்றுப்பொருள் வைப்பணி

79. வேற்றுப்பொருள் வைப்பணியாவது ஒரு பாட்டிலுள்ள முக்கியப் பொருளை வற்புறுத்துதற்கு, அதற்கினமான வேறொரு பொருள் ஈற்றில் வைக் கப்படுவது. இதை வடமொழியில் 'அர்த்தாந்தர நியாச அலங்காரம்' என்பர்.

உ-ம்.

நாடாளு தற்கு வசிட்டனிடு நன்னயநாள்

காடாளு நாளாகக் காட்டியே வீடாளுந்

தொல்லாழி யான்றனையுந் தூக்காது வென்றதென்றால் வெல்லாத தாரை விதி.

இதில் இராமபிரானுக்கு நாடாளக் குறித்த நாள் காடாளுதற் காயிற்று என ஒரு முக்கியப் பொருள் கூறி, பின்பு அதனை வற்புறுத்த 'வெல்லாத தாரை விதி' என வேறொரு பொருளை ஈற்றில் வைத்தமை காண்க.

ஒழித்துக் காட்டணி

80. ஒழித்துக் காட்டணியாவது ஒரு பொருளைக் கூற வேண்டி யவிடத்து அதனை ஒழித்து அது தோன்றுமாறு அதற்கு மறுதலையான பொருளைக் கூறுவது. இதை வடமொழியில் 'பரிசங்கியாலங்காரம்' என்பர்.

உ-ம்.

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன

அஞ்சிலம்பே வா-விட் டரற்றுவன - கஞ்சம்

கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே

விலங்குவன மெ-ந்நெறியை விட்டு.

இது நிடத நாட்டுத் தலைநகரான மாவிந்த நகர்ச் சிறப்பைக் கூறுவது. அங்கு மக்கள் நீதி தவறுதலும், மனம் சோர்தலும், புலம்புதலும், கலங்குத