உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

143

லும், நெறி விலகுதலும் இல்லையெனக் கூறவேண்டிய விடத்து, அதை நீக்கி அதற்கு மறுதலையாகச் சிலையே கோடுவன என்றும், குழலே சோருவன என்றும், சிலம்பே அரற்றுவன என்றும், கஞ்சமே கலங்குவன என்றும், காரிகை யார் கண்ணே விலங்குவன என்றும் கூறியிருத்தல் காண்க.

வஞ்சப்புகழ்ச்சியணி

81. வஞ்சப் புகழ்ச்சியணியாவது வஞ்சகமாக ஒருவரைப் புகழ்தல். அது பழிப்பதுபோற் புகழ்தலும், புகழ்வதுபோற் பழித்தலுமாக இருவகைப் படும். இதை வடமொழியில் 'வியாஜஸ்துதி அலங்காரம்' என்பர்.

உ-ம்.

பழிப்பதுபோற் புகழ்தல்:

இல்லெனுஞ்சொல் லறியாத சீகையில்வாழ் தானனைப்போ-

யாழ்ப்பாணன்யான்

பல்லைவிரித் திரந்தக்கால் வெண்சோறும் பழந்தூசும் பாலியாமல் கொல்லநினைந் தேதனது நால்வாயைப் பரிசென்று கொடுத்தான் பார்க்குள் தொல்லையென தொருவா-க்கும் நால்வா-க்கும் இரையெங்கே

துரப்புவேனே.

இஃது அந்தகக் கவி வீரராகவ முதலியார் தமக்கு யானையைப் பரி சிலாகத் தந்த தானன் என்னும் வள்ளலைப் பாடிய நிந்தாஸ்துதி. இதில் ஒரு வா-க்கு உணவு கிடையாத தம்மைக் கொல்ல நினைந்து கூட நால்வாயைக் கொடுத்தானென்று பழிப்பது போல அவன் யானைக் கொடையைப் புகழ்ந்திருத்தல் காண்க.

நால்வா--யானை; தொங்குகின்ற வாயை யுடையது.

புகழ்வதுபோற் பழித்தல்:

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செ-தொழுக லான்.

இதில் கீழ்மக்களைத் தேவருக்கொப்பாகப் புகழ்வதுபோலப் பழித் திருத்தல் காண்க. இது ஸ்துதி நிந்தை யெனப்படும்.

காட்சியணி

82. ஓர் இயற்கையான பொருள் அல்லது நிகழ்ச்சி உலகத்திலுள்ள ஓர் உண்மையை அல்லது நீதியைத் தெரிவிப்பதாகக் கூறுவது காட்சியணி. இதை வடமொழியில் 'நிதர்சன அலங்காரம்' என்பர்.