உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

உ-ம்.

இயற்றமிழ் இலக்கணம்

பிறர்செல்வங் கண்டால் பெரியோர் மகிழ்வும் சிறியோர் பொறாத திறமும் - அறிவுறீஇச்

செங்கமல மெ-ம்மலர்ந்த தேங்குமுத மெ-பசந்த பொங்கொளியோன் வீறெ-தும் போது.

இதில் சூரியோதயத்தில் தாமரை மலர்தலும், குமுதம் குவிதலும், பிறர் செல்வத்தைக் கண்டு பெரியோர் மகிழ்தலையும், சிறியோர், பொறாமைப் படுதலையுங் குறிக்குமெனக் கூறியிருத்தலைக் காண்க.

ஒட்டணி

83. ஒட்டணியாவது உபமானத்தைமட்டுங் கூறி அதன் உபமேயத் தைப் புலப்படுத்தல். இதற்குப் பிறிது மொழிதல் என்றும் பெயர். இதை வட மொழியில் ரஸ்துத பிரசம சாலங்காரம் என்பர்.

உ-ம்.

நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.

இவ் வுபமாணத்தால் அவரவர்க்குத் தத்தம் சொந்த இடத்து ஆற்றல் அதிகம் என்னும் உபமேயம் புலப்படுதல் காண்க.

உபமேயம் உபமானத்தை யொட்டியறிதலின் ஒட்டணி யெனப்பட்டது.

உயர்வுநவிற்சியணி

84. ஒரு பொருளை உள்ளவாறு கூறாது மிக உயர்திக் கூறுவது உயர்வு நவிற்சி யணியாம். இதை வடமொழியில் 'அதிசயோக்தி அலங்காரம்' என்பர்.

உ-ம்.

குமுத னிட்ட குலவரைக் கூத்தரில்

திமித மிட்டுத் திரியும் திரைகடல்

துமித மூர்புக வானவர் துள்ளினார்

அமுது மின்னும் எழுகெனும் ஆசையால்.

இஃது இராமர் ஏவலால் குமுதன் என்னும் குரங்குத் தலைவன் கடலுக்கு அணைகட்டினதின் வருணனை.

குமுதன் பெரிய குலகிரிகளை எடுத்துக் கடலின் இடக் கடல் கொந் தளித்து அதன் நீர் தேவலோகத்திற்சென்று தெறிக்க தேவரெல்லாம் மறுபடி யும் திருப்பாற்கடல் கடையப்படுகிறதென்றும் முன்போல அமிர்தம் கிடைக்கு மென்றும் துள்ளினாரென்று உயர்த்துக் கூறப்பட்டிருத்தல் காண்க.