உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இயற்றமிழ் இலக்கணம்

அவ்விரண்டிற்கும் இடைத்தரமான ஓசையுடைய எழுத்துக்களின் கூட்டம். இனம் -கூட்டம்.

13. க், ச், ட், த், ப், ற் என்ற ஆறும் வல்லினம்.

இவை வலி வன்மை, வன்கணம் எனவும் பெயர் பெறும்.

கணம் - கூட்டம்

ந.சூ. – வல்லினம் கசடத பற என ஆறே.

14. ங், ஞ், ண், ந், ம், ன் என்ற ஆறும், மெல்லினம். இவை மெலி, மென்மை, மென்கணம் எனவும் பெயர் பெறும்.

ந.சூ. மெல்லினம் ஙஞணந மன என ஆறே.

15. -, ர், ல், வ், ழ், ள் என்ற ஆறும் இடையினம்.

டை, இடைமை, இடைக்கணம் எனவும் பெயர் பெறும்.

ந.சூ:- இடையினம் யரலவ ழள என ஆறே.

வல்லினம் வலிய உறுப்பாகிய மார்பிலும், மெல்லினம் மெல்லிய உறுப்பாகிய மூக்கிலும் இடையினம் இவ்விரண்டிற்கு மிடையிலுள்ள உறுப்பாகிய கழூத்திலும் பிறக்கும். ஆகவே இடையினம் இடைத்தரமான ஓசையானன்றி, இடைத்தரமான பிறப்பிடத்தினாலும் அறியப்படும். வல்லினம், முதலிய மூவினங்களையும் உச்சரித்து அவற்றின் வன்மை. மென்மை, இடைமைகளைச் செவி கருவியாக ஒப்பு நோக்கி யுணர்க.

வன்கணம் மென்கணம் இடைக்கண மென்பன உயிர்க்கணம் என்பதோடு சேர்ந்து நாற்கண் மெனப்படும். உயிர்க்கணம் உயிரெழுத்தின் கூட்டம்.

4. உயிர்மெ- எழுத்து

16. உயிரும் மெ-யுங் கூடிப் பிறக்கும் எழுத்து உயிர்மெ-யெழுத்து. அதில் மெ- முன்னும் உயிர் பின்னும் வரும்.

உ-ம்.

க் + அ =க, ச்+ ஆ = சா; ட் +

இ = டி.

உயிர்மெ-யெழுத்து உயிர்மெ-போன்றமையின் உயிர்மெ-யெனப் பட்டது. உயிர்மெ- - பிராணி. பிராணி - பிராணனையுடைய உடம்பு. உயிர்மெ-- உயிரையுடைய மெ-. பிரணி, வடசொல், உயிர்மெ-, தென்சொல் பிராணி யென்னும் வடசொல் வழங்கவே, உயிர்மெ- என்னும் தென்சொல் மறைந்தது.

ஒரு பிராணியில் உயிர், உடம்பு என இரண்டிருப்பினும் அவை யிரண்டும் ஒன்றாகவே இயைந்து தோன்றும். அதுபோல ஒர் உயிர் மெ-யெழுத்தில்