உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

5

உயிர், மெ- என ஈரெழுத்திருப்பினும் அவையிரண்டும் ஒன்றாகவே இயைந் தொலிக்கும். இவ் வொருமை நயம்பற்றியே நம் முன்னோர் உயிர்மெ-க்குத் தனிவரி யமைந்தனர். ஆயினும் எழுத்துக் தொகைபற்றி உயிர் மெ- இரட்டை யெழுத்தேயன்றித் தனியெழுத்தாகாது. இதை ஆங்கில வரி வடிவால் தெளிவாயுணர்க.

ஒரு பிராணிகளில் உடம்பே முற்பட்டுத் தோன்றுவதுபோல, ஓர் உயிர்மெ-யெழுத்திலும் மெ-யெழுத்தே முற்பட்டுத்தோன்றும். இதை ஓலி வடிவாலும் உயிர்மெ-யைப் பிரித்தெழுதும் முறையாலும் கண்டு கொள்க.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தும், உயிரீறு மெ-ம் முதல் என்னும் புணர்ச்சி முறையுள்ளும் உயிர்மெஈரெழுத்தா யெண்ணப்படுதல் ஓர்க.

பதினெட்டு மெ-யோடும் பன்னீருயிரும் தனித்தனி கூட மொத்தம் உயிர்மெ-யெழுத்து (18 + 12 = 216) இருநூற்றுப் பதினாறாகும்.

5. ஆ-தவெழுத்து

18. ஆ-தம்: மூன்று புள்ளி (ஃ வடிவாக எழுதப்படும் எழுத்து. அது வடமொழி விசர்க்கம்போன்ற மூச்சொலி (Semi-aspirate) அல்லது மெல்லிய ககரம். (ககரத்திற்கும் ஹகரத்திற்கும் இடைத்தர ஒலி எனினும் ஓக்கும்.)

அது குறிலுக்குப் பின்னும் வல்லின உயிர்மெ-க்கு முன்னும் வரும்.

உ-ம் எஃகு, பஃறி (ஓடம்), அஃது.

அஃறிணை, பஃறொடை.

ஆ-தத்திற்கு முப்புள்ளி, தனிநிலை என்றும் பெயர். ஆ-தம் வலிய ஓசையுள்ள க, ச, த, ப என்னும் எழுத்துகட்குமுன் வரும்போது சற்றுக் ககரம் போல் வலிக்கும்.

உ-ம். எஃகு, பஃது,

ஆ-தம் சூலாயுதம் போல்வதென்றும், கேடகம் போல்வதென்றும் சமை யற் கருவியாகிய அடுப்புப் போல்வதென்றும், அதன் பெயர்க் காரணம் பல வாறாகக் கூறுவர்.