உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இயற்றமிழ் இலக்கணம்

6.

குறியதன் முன்னர் ஆ-தப் புள்ளி

உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.

(நன். சூ.90)

சூத்திரத்தில் முன் என்றது இடமுன்.

6. குற்றியலுகரம்

19. குறுகி யொலிக்கும் உகரம் குற்றியலுகரம். அது

y என்னும்

வடமொழி யெழுத்துகளில் உள்ள உகரம்போல இகரத்திற்கும் உகரத் திற்கும் நடுத்தரமாயொலிக்கும்.

20. ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெ-யின்மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம். குற்றியலுகரம் வரும்சொல் ஈரெழுத்திற்குக் குறை யாது; ஈரெழுத்தாயின் முதலெழுத்து நெடிலாயிருக்கும்; மூவெழுத்தும் அதற்கு மேலுமாயின் முதலில் எந்த எழுத்து இருப்பினும் சரியே.

21. குற்றியலுகரச்சொல் ஈற்றயல் (கடைசிக்கு முந்தின) எழுத்துப் பற்றி ஆறு தொடராக வகுக்கப்படும்.

எழுத்துகள் தொடர்ந்து நிற்றலின், சொல் தொடர் எனப்பட்டது.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

உ-ம்.

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்

ஆறு, காசு

ஆ-தத் தொடர்க் குற்றியலுகரம்

எஃது, அஃது

வரகு, தராசு

பட்டு, சுக்கு

சங்கு, வண்டு

மார்பு, தெள்கு

வன்றொடர்க் குற்றியலுகரம்

மென்றொடர்க் குற்றியலுகரம்

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

ஆறு று தொடர்களிலும் நெடிற்றொடரொன்றே ஈரெழுத்துள்ளது; ஏனையவைந்தும் மூவெழுத்தும் அதற்கு மேலு முள்ளன.

நெடிற்றொடர்க்கும் உயிர்த்தொடர்க்கும் உயிரும் உயிர்மெ-யும் ஈற்றயலாக வரும்; ஆ-தத் தொடர்க்கு ஆ-தம் ஈற்றயலாக வரும். ஏனைத் தொடர்கட்கு மெஈற்றயலாக வரும்.

உயிர்த்தொடரில் ஈற்றயலா வருவது உயிர்மெ-யேனும், அஃது உயிரும் மெ-யுமாகப் பகுக்கப்படும்போது, உயிரே ஈற்றயலா- நிற்றலின் உயிர்த்தொட ரெனப்பட்டது.

நெடிற்றொடர்க்கும் உயிர்த்தொடர்க்கும் வேறுபாடு.