உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

நெடிற்றொடர்

1. ஈரெழுத்தாலாயது.

2. நெடிலே ஈற்றயலாக வருவது.

3. உயிரும் உயிர்மெ-யும் ஈற்றயலாக

உயிர்த்தொடர்

மூவெழுத்திற்குக் குறையாதது.

குறிலும் நெடிலும் ஈற்றயலாக வருவது. உயிர்மெ-யே ஈற்றயலாக

வருவது. வருவது.

7

குற்றியலுகரம் ஈற்றயலெழுத்துப்பற்றி முப்பத்தாறாகக் கூறப்படும். ஆறு தொடர்களிலும் முறையே நெடிலேழும், ஆ-தமொன்றும், ஒளகார மொழிந்த உயிர்பதினொன்றும், வல்லினமெ-யாறும். மெல்லினமெ- யாறும், வகரமொழிந்த இடையினமெ– ஐந்துமாக மொத்தம் முப்பத்தா றெழுத்துகள் ஈற்றயலாதல் காண்க.

குற்றியலுகர மல்லாத உகரமெல்லாம் முற்றியலுகரமாகும்.

உ-ம்.

தனிக்குறில்

கு.

இணைக்குறில்

அது, உடு.

மெல்லின மெ-ச் சார்பு

வேணு, பொருமு, தென்னு.

இடையின மெ-ச் சார்பு

ஏழு, வரவு.

குற்றியலுகர முற்றியலுகரங்கள் குற்றுகரம் முற்றுகரமெனவுங் கூறப்படும்.

7.

நெடிலோ டா-தம் உயிர்வலி மெலிஇடை

தொடர்மொழி யிறுதி வன்மையூர் உகரம்

அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே.

7. குற்றியலிகரம்

(நன்.சூ.94)

22. குறுகி யொலிக்கும் இகரம் குற்றியலிரகம். அஃது இகரத்திற்கும் ஏகாரத்திற்கும் இடைத்தரமாஒலிக்கும்.

23. குற்றியலிகரம் புணர்மொழி, தனிமொழி என்னும் இருவழியான் வரும். 24. புணர்மொழி: குற்றியலுகரம் யகரத்தோடு (யகர முதன்மொழி யோடு புணரும்போது இகரமா-த் திரியும். அவ் விகரம் குற்றியலிகரம். வரகு + யாது = வரகியாது

உ-ம்.

வீடு + யாருக்கு = வீடியாருக்கு

25. தனிமொழி: 'மியா' என்னும் முன்னிலையசைச் சொல்லிலுள்ள இகரம் குற்றியலிகரம்.

குறிப்பு: பொருளில்லாது செ-யுளில் வெற்றிடத்தை நிரப்புதற் கென்றே சில அசைகளும் சொற்களுமுள. அவை பொதுவா- அசைநிலை யெனப்