உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இயற்றமிழ் இலக்கணம்

படும். அவற்றுள் முன்னிலை யிடத்திற்கே யுரியன முன்னிலை யசைச்சொல். அவற்றுள் ஒன்று 'மியா' இது பொருளில்லது; பூனையொலியன்று.

உ-ம்.

கேண்மியா (கேள்), சென்மியா (செல்).

குற்றியலிகர மல்லாத இகரமெல்லாம் முற்றியலிகரம்.

குற்றியலிகர முற்றியலிகரங்கள் முறையே குற்றிகரம், முற்றிகரம் எனவுங்

கூறப்படும்.

எழுத்து முறையில் இகரம் உகரத்திற்கு முந்தியதேனும், குற்றியலிக ரத்தில் ஒருவகை குற்றியலுகரத்தா லுண்டாகின்றமையின், இது குற்றியலுக ரத்திற்குப் பின்னர்க் கூறப்பட்டது.

8. யகரம் வரக்குறள் உத்திரி இகரமும்

அசைச்சொல் மியாவின் இகரமுங் குறிய.

8. போலி

(நன்.சூ.93)

26. ஒரு சொல்லில் ஓரிடத்தில் ஓரெழுத்திற்குப் பதிலாக மற்றோ ரெழுத்து வந்தும் பொருள் மாறாதிருப்பின் போலி எனப்படும்.

போல வருவது போலி: உலக வழக்கினுள்ளும் பட்டுப் போலி, கற் போலி கதர்ப்போலி, முதலியவற்றைக் காண்க. பட்டுப் போல்வது பட்டுப் போலி, ஓரெழுத்துப்போல மற்றோரெழுத்து வருவது எழுத்துப்போலி.

ஒரு சொல்லுக்கு முதல், இடை, கடையென மூவிடமுண்டு.

உ-ம்.

முதல்: நாயிறு - ஞாயிறு

நகரத்திற்கு ஞகரம்

நயம் - ஞயம் (ஞயம்படவுரை)

பையல் - பயல்

மையல் - மயல்

இடை: குயவன் - குசவன்

நெய்வு - நெசவு

சிவப்பு - சிகப்பு

தாவம் - தாகம்

கடை: கடம் கடன்

-

கலம் - கலன்

மதில் - மதிள்

போலி

ஐகாரத்திற்கு அகரம்

போலி

யகரத்திற்குச் சகரம்

போலி

வகரத்திற்குக் ககரம்

போலி

மகரத்திற்கு னகரம்

போலி லகரத்திற்கு ளகரம்

செதில் - செதிள்

போலி

}

}

}

}

}

}