உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

௨. சொல்லியல்

1.சொல்

27. எழுத்துத் தனித்தாவது, (பலவாகத்) தொடர்ந்தாவது பொருள் தரின்

சொல்லாம்.

உ-ம்.

ஆ, ஈ,

ஆணி,

அறம்,

ஓரெழுத்துச் சொற்கள்.

பலவெழுத்துச் சொற்கள்

-

விரும்பு,

நடந்தனன்.

ஆ பசு. தன்னை யுணர்த்தும்போது எழுத்து; பசுவை உணர்த்தும் போது சொல்.

28. சொற்கள் அமைப்பைப்பற்றிப் பகாப்பதம், பகுபதம் என இரு ரு வகைப்படும்.

பகுத்தல் = வகுத்தல். பதம் = சொல்.

29. பகாப்பதம் பல உறுப்புகளாகப் பகுக்கப்படாது ஒரே வடி வாயிருக்கும் சொல்.

உ-ம்.

கண், படி.

இச் சொற்களைப் பல உறுப்புகளாகப் பிரிப்பின் பொருள்தரா.

30. பகுபதம் பல உறுப்புகளாகப் பகுக்கப்படும் சொல். அவ் வுறுப்பு களில் முதலிலிருப்பது பகுதி யென்றும், கடைசியிலிருப்பது விகுதி யென் றும், இடையிலிருப்பது இடைநிலையென்றுங் கூறப்படும்.

அவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் பொருள் தரும்; அல்லது பயன் நோக்கி நிற்கும்.

உ-ம்.

கண்ணன் - கண் பகுதி, அன் விகுதி.

செ-கிறான் - செ- பகுதி, கிறு இடைநிலை, ஆன் விகுதி.

பகாப்பதத்திலிருந்தே பகுபத முண்டாகும். பகாப்பதத்தோடு விகுதி முதலிய உறுப்புகள் சேரின் பகுபதமாம். பகாப்பதம் பகுபதத்திற் பகுதியா யமைந்திருக்கும்.

9