உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இயற்றமிழ் இலக்கணம்

9. எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்

பதமாம் அதுபகாப் பதம்பகு பதம்என

இருபா லாகி இயலு மென்ப.

(நன். 128)

31. பகாப்பதமும் பகுபதமுமாகிய சொற்கள் இலக்கண வகையில், (1) பெயர்ச்சொல், (2) வினைச்சொல், (3) இடைச்சொல், (4) உரிச்சொல் என நான்கு வகையாகவும்; இலக்கிய வகையில், (1) இயற்சொல், (2) திரிசொல், (3) திசைச்சொல், (4) வடசொல் நான்கு வகையாகவும் வகுக்கப்படும்.

32. அவற்றுட் பெயர்ச்சொல்லாவது ஒரு பொருளின் பெயர்.

உ-ம்.

கண்ணன், மாடு.

பெயரே சொல்லாயிருத்தலின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப் பிறிதுபடக் கூறுவது பொருந்தாது. பெயர்ச்சொல் பெயராகிய சொல். 33. வினைச் சொல்லாவது ஒரு பொருளின் வினையைக் குறிக்கும் சொல்.

உ-ம். (இராமா) நட.

(தச்சன்) செ-தான்.

வினை - செ-கை, வினை வேறு; வினையைக் குறிக்கும் சொல் வேறு.

34. இடைச்சொல்லாவது பெரும்பாலும் தனித்து வராது பெயரிடத் தும் வினையிடத்தும் வருஞ்சொல். இடை இடம்.

உ-ம். 'கந்தனும் கடைக்குச் சென்றான்' என்னும் வாக்கியத்தில், உம், கு. ஆன் என்பவை இடைச்சொற்கள்.

35. உரிச்சொல்லாவது செ-யுட்கே யுரிய சொல்.

உ-ம். சாலவுண்டான் சால = மிக. கடி நகர் -கடி = காவல். வடிவேல் - வடி = கூர்மை.

குறிப்பு: உரி, உரிமை. உரிச்சொல் குணத்திற்குரிய சொல்லென்றும், பெயர் வினைகட்குரிய சொல்லென்றும், ஒருசொல் பல பொருட்கும், பல சொல் ஒருபொருட்குமாகவுரிய சொல்லென்றும், வினைப்பகுதியென்றும், பலரும் பலவாறாகக் கூறுவர். அவை யெல்லாம் போலியுரையென்பதை இந் நூலின் இறுதியிலுள்ள 'உரிச்சொல் விளக்கம்' என்னும் கட்டுரையிற் கண்டுகொள்க.