உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

11

36. இயற்சொல்லாவது எல்லார்க்கும் பொருள் விளங்கும் எளிய சொல். இயல் - இயல்பு. இயல்பா-ப் பொருளுணர்த்தும் சொல் இயற்சொல் லெனப்பட்டது.

உ-ம். யானை, வந்தான்.

37. திரிசொல்லாவது கற்றோர்க்கே பொருள் விளங்கும் அருஞ்சொல். அஃது ஒருபொருட் பலசொல்லென்றும் பலபொரு ளொருசொல்லென்றும் இருவகைப்படும்.

உ-ம்.

வேழம், ஓங்கல் என்பன யானையைக் குறிக்கும்.

ஒருபொருட் பலசொல்

படர்ந்தான், ஏகினான் என்பன சென்றான் என்னும் வினையைக் குறிக்கும் ஒருபொருட் பலசொல்.

வேழம் என்பது, கரும்பு, மூங்கில், யானை எனப் பலபொருள் தரும் பலபொரு ளொருசொல்.

புரி என்பது செ-, விரும்பு எனப் பலபொருள்படும் பலபொரு ளொரு சொல்.

இயற்சொல்லினின்றும், (அதாவது எளிதா-ப் பொருள் விளக்குந் தன்மையினின்றும்) திரிந்த சொல் திரிசொல்லெனப்பட்டது. திரிதல் வேறு படுதல்.

இயற்சொல், திரிசொல் இரண்டும் செந்தமிழ்ச் சொற்களாம். செந்தமிழ் - செம்மையான தமிழ். செம்மை, இலக்கணமுந் தூ-மையுமுடைமை.

இயற்சொல்லுந் திரிசொல்லும் திசைச்சொல் வடசொற்களுக்கின மான இலக்கியவகைச் சொல்லாதலின் இங்குக் கூறப்பட்டன.

38. திசைச்சொல்லாவது. பல திசைகளிலுமுள்ள பல மொழிகளினின் றும் தமிழில் வந்து வழங்கும் சொல்.

உ-ம்.

தந்தையை அச்சன் என்பது மலையாளச் சொல். மாமரத்தைக் கொக்கு என்பது துளுவச் சொல். அகப்படுதலைச் சிக்குதல் என்பது கன்னடச்சொல்.

சொல்லுதலைச் செப்புதல் என்பது தெலுங்குச்சொல்.

முதலை அசல் என்றும் பிரதியை நகல் என்றும் சொல்லுவது இந்துஸ்தானிச் சொல்.