உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இயற்றமிழ் இலக்கணம்

இனி முன்காலத்திலில்லாத பல பொருள்களும் அலுவல் (உத்தியோ கம்)களும் இப்போது பிறநாட்டாரால் ஏற்பட்டிருப்பதால் அவற்றைக் குறிக் கும் சொற்களும் திசைச்சொற்களா யிருக்கின்றன.

உ-ம்.

புனல், மோட்டார், கலெக்ற்றர் - ஆங்கிலச்சொல்.

அலமாரி

தாசில்தார்

-போர்த்துக்கீயச் சொல்.

- இந்துஸ்தானிச் சொல்.

சில திசைச்சொற்கள் வேண்டாது (அனாவசியமா-) வழங்குவதால், அவற்றுச் சரியான தமிழ்ச்சொற்கள் மறைந்தொழிகின்றன.

உ-ம். இங்கிலீ கார்டியன்

தமிழ்

இந்துஸ்தானி தமிழ்

முதுகண்,

ஜில்லா

கோட்டம்.

கரணவன்

வளநாடு.

லைட்ஹவுஸ் கலங்கரை விளக்கம் வாரிஸ்

தாலூகா

கூற்றம்,

நாடு

பாங்கு

வட்டக்கடை இனாம்

உரிமை

ஜமீன்தார்

நன்கொடை, பரிசு.

மிராஸ்தார்

கிழார், வேள்.

பண்ணையார்.

பண்டையிலக்கணப்படி திசைச்சொல் கொடுந்தமிழ்ச் சொல்லையே குறிக்கும். கொடுந்தமிழ் செந்தமிழ்க்கு மாறான கொச்சைத் தமிழ்; தெலுங்கு மலையாளம் முதலிய மொழிகள் முன்காலத்தில் கொடுந்தமிழாயிருந்து பின்பு வடமொழிச் சேர்க்கையால் தனிமொழிகளாகப் பிரிந்துவிட்டன. பின்பு தமிழ்நாட்டிற்குள்ளேயே தென்பாண்டிநாடு, குட்டநாடு முதலிய பன்னிரு நாடுகளில் வழங்கும் சிறப்புச் சொற்களைத் திசைச்சொல்லாகக் காட்டினர். அம் முறைப்படி இன்று கூறும் திசைச்சொற்களாவன:

தள்ளுவதை நூக்குவது என்பதும்

பதநீரைத் தெளிவு என்பதும்

வடார்க்காட்டுச்சொல்.

காணாமற் போனதைக் கெட்டுப்

போனதென்றும், மருமகளை மாட்டுப்

பெண்ணென்றும் சொல்லுவது

தஞ்சைநாட்டுச் சொல்.

எறிதலை இடுதலென்பதும்

பெரியதைச் சோடு என்பதும்

கோவைநாட்டுச் சொல்.