உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு) தபாலை அஞ்சலென்பதும்

இடத்தை இலக்கு என்பதும்

பதநீரைப் பனஞ்சா றென்பதும்

நகையாடுதலைச் கோட்டா என்பதும்

தென்னாட்டுச் சொல்.

சென்னைநாட்டுச் சொல்.

13

தென்பாண்டிநாடு, குட்டநாடு முதலிய கொடுந்தமிழ் நாட்டுப் பாகு பாடு இக்காலத்திலில்லை. செந்தமிழ் கொடுந்தமிழ் நாட்டெல்லைகளும் பெரிதும் மாறியிருக்கின்றன.

திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் முதலிய ஜில்லாக்களையும், யாழ்ப்பாணத்தையும் ஒருவாறு தமிழுக்குச் சிறந்தவை யென்னலாம். அவற்றுள் யாழ்ப்பாணமும், திருநெல்வேலியும் சில வழக்குப்பற்றி மிகச் சிறந்தனவாகும்.

39. வடசொல்லாவது வடமொழி (சமஸ்கிருதம்) யிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொல்.

உ-ம். பாஷை, வார்த்தை, சுகம், துக்கம்.

முன்காலத்தில் இந்து தேசத்தில் வடக்கே சமஸ்கிருதமும் தெற்கே தமிழுமாக இருபெரு மொழிகளே வழங்கி வந்தன. அதனால் அவை முறையே வடமொழி, தென்மொழி யெனப்பட்டன. இக் காலத்தும் இவையிரண்டே வடவிந்திய மொழிகட்கும் தென்னிந்திய மொழிகட்கும் முறையே தா- மொழி களாகும்.

குறிப்பு: இயற்சொல் முதலிய இலக்கியவகைப் பாகுபாட்டில் வட சொல் ஒன்றே பிறமொழியாகும். ஏனை மூன்றும் செந்தமிழாயினும் கொடுந் தமிழாயினும் தமிழ்மொழியேயாம். வடமொழி தவிரப் பிறமொழி முற்காலத் தில் தமிழ்நாட்டிலில்லாமையால் வேறொன்றுங் கூறப்படவில்லை.

2. பெயர்ச் சொல்

பெயர்வகை: இடுகுறிப்பெயர், காரணப்பெயர்.

40. பொருள்கட்குப் பெயர்கள், இடுகுறி, காரணம் என்ற இருவகை

யான் இடப்படும்.