உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இயற்றமிழ் இலக்கணம்

41. இடுகுறியாவது யாதொரு காரணமுமின்றி நம் முன்னோரால் ஒரு பொருளுக்கு இடப்பட்ட குறி. இதற்குப் பொருளில்லை. குறி - பெயர்.

உ-ம். கல், மண், மரம்.

42. காரணமாவது ஏதேனுமொரு காரணம்பற்றி ஒரு பொருளுக்கு இடும் பெயர். இது காரணப் பெயரென்றும், காரணக்குறியென்றுங் கூறப்படும். இதற்குப் பொருளுண்டு.

உ-ம்.

உடை - உடுப்பது

பறவை - பறப்பது

வளையம் - வளைந்திருப்பது

முக்காலி - மூன்று கால்களை யுடையது.

2. அறுபொருட் பெயர்

43. எல்லாப் பெயர்ச்சொற்களும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என ஆறுவகைப்படும்.

பொருள்கள் ஆறுவகையாதலின் அவற்றின் பெயர்களும் ஆறு வகைப்

பட்டன.

44. பொருட்பெயர்: தனிவடிவும் இடப்பெயர்வும் உடைய ஒரு பொருளின் பெயர் பொருட்பெயராகும்.

உ-ம். இராமன், மாடு, கல், மரம்.

45. இடப்பெயர்: ஓர் இடத்தின் பெயர் இடப்பெயராகும்.

உ-ம். நாடு, நகர், மலை, ஆறு.

குறிப்பு: மலை, வீடு முதலியவற்றிற்கு வடிவிருப்பினும், அவை நிலத் தினின்றும் பிரிக்கப்படாமையானும், நிலைபெயராகாமையானும் டப் பொருள்களே யன்றிப் பொருட்பொருள்களாகா. ஆகவே அவற்றைக் குறிக்கும் பெயர்களும் இடப்பெயர்களேயன்றிப் பொருட்பெயர்க ளாகா.

46. காலப்பெயர்:- காலத்தின் பெயர் காலப் பெயர்.

உ-ம். நொடி, பகல், நாள், ஆண்டு.

47. சினைப்பெயர்: ஓர் உறுப்பின் பெயர் சினைப்பெயர்.

சினை - உறுப்பு.

உ-ம்.

கை, கால், இலை, கா-.