உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

15

குறிப்பு: உயிரில்லாத பொருள்களின் உறுப்புகள் சினையெனப் படா. பிணம், பாவை முதலியவற்றின் உறுப்புகள் ஒற்றுமையும் ஒப்புமையும்பற்றிச் சினையெனப்படும்.

48. குணப்பெயர்: ஒரு குணத்தின் பெயர் குணப்பெயர், குணமாவது ஒரு பொருளின் இயல்பு. அது பண்பு என்றுங் கூறப்படும்.

உ-ம். நன்மை, அன்பு, வெண்மை, வெம்மை, சினம்.

49. தொழிற்பெயர்: ஒரு தொழிலின் பெயர் தொழிற்பெயர். தொழில் - செ-கை.

தொழிற்பெயர் பல வகைப்படும்.

(1) விகுதி பெற்ற தொழிற்பெயர்

உ-ம்.

தல் படித்த

அல்- பாடல் கல்கொடுக்கல் அம் - வஞ்சம் ஐகொலை

கை - நடக்கை

காடு வேக்காடு அரவு - தேற்றரவு

-

ஆனை வாரானை

இல் - எழில்

ஆல்-எழால் அனை-வஞ்சனை அனம் - கண்டனம்

அணம் - கட்டணம் அடம் -கட்டடம் அகம் - வஞ்சகம்

தை - நடத்தை

வை - பார்வை

பு – படிப்பு

உ-வரவு இவெகுளி

அரம் - விளம்பரம்

-

தி மறதி

இயம் - கண்ணியம்

சி - முயற்சி வி - கல்வி

பாணி - சிரிப்பாணி

மை - வந்தமை

உள் - விக்குள்

து - வந்தது.

அம், அல் முதலிய விகுதிகள் அகரம் கெட்டும் நிற்கும்.

உ-ம். மண + அம் = மணம். சிவ + அல் = சிவல்.

ஒரே வினை பல விகுதிகளையும் ஏற்கும்.

உ-ம். நடம், நடை, நடக்கை, நடத்தல், நடப்பு.

எல்லா வினைகளும் தல், கை, மை, து என்ற விகுதிகளை யேற்கும். இவற்றுள் மை, து என்ற இரண்டும் காலங்காட்டும் தொழிற்பெயர் விகுதி களாகும்.