உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இயற்றமிழ் இலக்கணம்

ஒரு வினை பல விகுதிகளை யேற்பின், விகுதிதோறும் வெறு பொருள்

தோன்றும்.

உ-ம். கற்றல் = படிக்குந் தொழில்

கற்கை = படிப்பு

கல்வி = வித்தை (Education)

கலை = சாஸ்திரம்

கற்பு = மாதரொழுக்கம்

(2) முதனிலைத் தொழிற்பெயர்: விகுதிபெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராயின் முதனிலைத் தொழிற்பெயர் முதனிலை - பகுதி.

உ-ம். தட்டு, தாவு, உரை, அடி என்பவை தட்டுதல், தாவுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும்போது முதனிலைத் தொழிற் பெயர்களாகும்.

(3) முதனிலை திரிந்த தொழிற்பெயர்: விகுதிபெறாமல் முதனிலை திரிந்து தொழிற்பெயராயின் முதனிலை திரிந்த தொழிற்பெயராகும்.

உ-ம். பொரு போர்.

கெடு கேடு

-

புறப்படு புறப்பாடு. சாப்பிடு - சாப்பாடு.

(4) முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர்:

உ-ம். படி + அம் = பாடம்

தவி + அம் = தாவம் (தாகம் - போலி)

கொள் + தல் = கோடல்

செல் + தல் = சேறல்

குறிப்பு: தொழிற்பெயர் விகுதிகளில், துவ்விகுதி, அவன் வந்தது எனக்குத் தெரியாது, அவன் வருகின்றது எனக்குத் தெரியாது அவன் வரு வது எனக்குத் தெரியாது. என முக்காலத்திலும், மைவிகுதி அவன் வந்தமை எனக்குத் தெரியாது, அவன் வருகின்றமை எனக்குத் தெரியாது என இரு காலத்திலும் வரும்.

வினையாலணையும் பெயர்

50. வினைமுற்றே பெயராகி எழுவாயைக் குறிக்குமானால் வினை யாலணையும் பெயராம்.