உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

வினையாலணைகின்ற பெயர், வினையாலணையும் பெயர்.

உ-ம். சொல்வார் சொன்னாலும் கெட்பார்க்கு மதியில்லையா? இவ்வழியா- அவ்வூருக்குப் போவார் வருவார் பலர். இவ்விரு கனிகளில் புளித்தது உனக்கு; இனித்தது எனக்கு.

17

இவ் வாக்கியங்களில் வரும் சொல்வார், கேட்பார், போவார், வருவார், புளித்தது, இனித்தது என்கின்ற பெயர்கள், வினையாலணையும் பெயர்கள்.

வினையாலணையும் பெயர்க்கும் வினைமுற்றுக்கும் வடிவில் வேறு பாடின்றேனும், பெயர்ப்பொருளினாலும், வேற்றுமை யேற்குந் தன்மை யினாலும் வினையாலணையும் பெயர் பிரித்தறியப்படும். பெயர்ச்சொல் லுக்கேயன்றிப் பிறசொல்லுக்கு வேற்றுமையில்லை.

தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் வேறுபாடு.

தொழிற்பெயர்

(1) தொழிலின் பெயர்

(2) மை, து விகுதி பெற்ற

பெயரே காலங்காட்டும்

(3) படர்க்கைக்கே யுரியது.

வினையாலணையும் பெயர்

தொழிலைச் செ-யும் கருத்தாவின் பெயர்.

எல்லாப் பெயருங் காலங் காட்டும். மூவித்திற்கு முரியது.

நேற்று வந்தேனுக்கு என்ன தெரியும்? நேற்ற வந்தா-க்கு என்ன தெரியும்? நேற்று வந்தானுக்கு என்ன தெரியும்? என மூவிடத்தும் வினை யாலணையும் பெயர் வருதல் காண்க.

இனி வினையாலனையும் பெயர்கள் சொல்வார், கேட்பார் என்றிராமல் சொல்பவர் என்று மிருக்கும். இவ்விரு வடிவுகளிலும் முன்னது சிறந்ததாம்.

51. கிளைப்பெயர்: இனமுறையைக் குறிக்கும் பெயர் கிளைப்பெயர்.

கிளை - இனம், உறவின் முறை.

உ-ம். அண்ணன், தங்கை, நமர்.

52. சாதிப்பெயர்: மக்களின் குலத்தைக் குறிக்கும் பெயர், சாதிப்பெயர்.

உ-ம். பார்ப்பான், பாணன், குறவன், தொம்பன்.

53. அளவுப்பெயர்: பொருள்களின் அளவைக் குறிக்கும் பெயர், அளவுப்பெயர்.