உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இயற்றமிழ் இலக்கணம் அளவு - எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நால்வகைப்படும். உ-ம் எண்ணல் - கால், அரை, ஒன்று, இரண்டு. எடுத்தல் - பலம் வீசை, துலாம், பாரம் முகத்தல் - நாழி, கலம், குறுணி, கோட்டை நீட்டல் - சாண், முழம், கெசம். 5. மூவிடப் பெயர் 54. எல்லாப் பெயர்களும், இடம்பற்றித் தன்மைப்பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப்பெயர் என மூவகைப்படும். 55.பேசுவோன் தன்னைக் குறிப்பது தன்மைப்பெயர். உ-ம். ஒருமை யான் நான் பன்மை யாம், யாங்கள் நாம், நாங்கள் இவற்றுள் நாம் என்னும் பெயர் முன்னிலையாரையும், நாங்கள் என் னும் பெயர் படர்க்கையாரையும் தன்மையோடு உளப்படுத்தும். 56. பேசுவோன், முன்னால் நிற்பவனைக் குறிப்பது முன்னிலைப் பெயர். ஒருமை உ-ம். நீ பன்மை நீயிர், நீவிர், நீர், நீம், நீங்கள் முன்னிலைப் பன்மைப் பெயர்கள் சமயம்போல் படர்க்கையாரை உளப்படுத்துவது முண்டு. 57. தன்மை முன்னிலை இரண்டையும் தாண்டிப் படர்வது படர்க்கை. ஆகவே தன்மைப் பெயரும் முன்னிலைப்பெயரு மல்லாத எல்லாப் பெயர் களும், படர்க்கைப் பெயர்களாம். படர்தல் - செல்லுதல். ஒருமை உ-ம் அவன் அது பன்மை அவர்கள் மரம் அவை மரங்கள்