உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

பொதுப்பெயர்கள்

19

58. தான், தாம் என்னும் பெயர்கள் இருதிணைக்கும், எல்லாம் என் னும் பெயர் இருதிணை மூவிடத்திற்கும் பொதுவா- வருதலின் இவை பொதுப்பெயர் எனப்படும்.

உ-ம்.

ஒருமை அவன்தான் (himself)

அவள்தான் (herself)

அதுதான் (itself)

பன்மை நாங்கள் எல்லாம்

உயர்திணை

அஃறிணை

தன்மை

நீங்கள் எல்லாம்

முன்னிலை

அவர்தாம்

உயர்திணை

அவைதாம்

அஃறிணை

படர்க்கை

அவர்கள் எல்லாம்

உயர்திணை

அவை எல்லாம்

அஃறிணை

தன்மை முன்னிலைப் பெயர்கள் ஒருமை, பன்மை யென்னும் எண்ணே யன்றித் திணை, பால் காட்டா இருதிணைக்கும் பொதுவா- வருதலின், அவை

யும் திணைப்பொதுப் பெயர்களாம்.

10. தன்மை முன்னிலை படர்க்கைமூ விடனே.

11. தன்மை யான்நான் யாம்நாம் முன்னிலை எல்லீர் நீயிர் நீவிர் நீர்நீ

அல்லன படர்க்கை எல்லாம் எனல்பொது.

பெயரிலக்கணம்

(நன். 266)

(560T. 285)

59. பெயர்ச்சொற்கள் திணை, பால், எண், இடம், வேற்றுமை என ஐந் திலக்கணங்களைக் காட்டும். இவற்றுள் வேற்றுமை யொன்றே பெயருக்குச் சிறப்பிலக்கணம். ஏனை நான்கும் பெயர், வினை என்னுமிரண்டிற்கும் பொதுவாம்.

1. திணை

60. திணையாவது குலம். எல்லாப் பொருள்களும் இலக்கணத்தில் உயர்திணை, அஃறிணை என இருதிணையாக வகுக்கப்படும்.

உயர்திணை உயர்குலம். அஃறிணை (உயர்வு) அல்லாத குலம்; அதாவது தாழ்குலம். அல் + திணை = அஃறிணை.

61. பகுத்தறிவுள்ள மக்களும், தேவரும் நரகரும் உயர்திணை; மற்றப் பொருள்களெல்லாம் அஃறிணை.