உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இயற்றமிழ் இலக்கணம்

மாடு, மரம் முதலிய உயிருள்ளனவும், கல், மண் முதலிய உயிரில் லனவாக இருவகைப்படும் அஃறிணை.

மக்கள் - மனிதர். மனிதரே நல்வினையால் தேவரும், தீவினையால் நரகருமாவர். மனிதனுக்குச் சிறந்தது பகுத்தறிவாதலின், பகுத்தறிவில்லாத மனிதரையெல்லாம் மாக்களென அஃறிணைப் பட இகழ்ந்து கூறுவர் பண்டை இலக்கணிகள். மாக்கள் - விலங்குகள் அல்லது விலங்கு போல்வார்.

மனிதன் உயர்திணையேனும், உயிரும் உடம்பும் பிரித்துக் கூறப்படும்

போது அஃறிணையேயாம்.

உ-ம். உயிர் ஒடுங்குகிறது; உடல் நடுங்குகிறது.

கடவுள் உயர்திணையாகவும் அஃறிணையாகவும் கூறப்படுவர். கடவுள் இருக்கிறார். கடவுள் இருக்கிறது.

கடவுள், மண், விண் முதலான அஃறிணைப் பொருள்களின் வடி வாகவும் இருப்பதனால் அவர் அஃறிணையாகவுங் கூறப்படுவர்.

12. மக்கள் தேவர் நரகர் உயர்திணை

மற்றுயி ருள்ளவும் இல்லவும் அஃறிணை. (நன்.சூ.261)

2.பால்

+

62. பால் என்பது பகுப்பு; அதாவது திணையின் பகுப்பு. பகு அல் பகல் - பால்.

63. பால்

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்

பால் என ஐந்து வகைப்படும்.

64. உயர்திணையில் ஒரே ஆணைக் குறிப்பது ஆண்பால்; ஒரே பெண் ணைக் குறிப்பது பெண்பால்; ஆணாயினும் பெண்ணாயினும், ஆணும் பெண்ணும் கலந்தாயினும் பலரைக் குறிப்பது பலர்பால்.

65. அஃறிணையில் ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால், பலவற்றைக் குறிப்பது பலவின்பால்.

66. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் என்னும் மூன்றும் ஒருமைப் பால் எனவும், பலர்பால், பலவின்பால் என்னுமிரண்டும் பன்மைப் பால் எனவுங் கூறப்படும்.

=