உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

21

ஆண்பால் முதலிய ஐந்தும் படர்க்கைக்கே யுரியன. ஏனைத் தன்மை முன்னிலைகள் ஒருமை, பன்மை என்னும் எண் காட்டுமேயன்றித் திணை பால் காட்டா.

உ-ம். இராமன், மகன், அவன்

சீதை, மகள், அவள்

புதல்வர், ஆடவர் புதல்வியர், பெண்டிர்

மாந்தர், மக்கள்

மாடு, மரம், அது

ஆண்பால் பெண்பால்

ண்மைப் பலர்பால் உயர்திணை

பெண்மைப் பலர்பால்

பொதுமைப் பலர்பால்

ஒன்றன் பால்

மாடுகள், மரங்கள் அவை - பலவின்பால்

அஃறிணை

சேவல், கோழி, காளை, பசு என அஃறிணையினும் ஆண்பாற் பெண்பாற் பகுப்புள்ளதேனும், அஃது இலக்கணத்திற்குக் கொள்ளப்பட வில்லை, ஏனெனின்

1. உயர்திணைக் கிருப்பதுபோல் அஃறிணையிலுள்ள எல்லாப் பொருள்கட்கும் ஆண் பெண் பாகுபாடில்லை.

2. அப் பாகுபாடு உள்ளவற்றையும், மாடு வந்தது, பசு வந்தது என்று ஒருமை விகுதியால் ஒன்றுபடக் கூறுவதல்லது மாடுவந்தான், பசு வந்தாள் எனப் பால் விகுதியால் வேறுபடக் கூறுவதில்லை.

13. ஆண்பெண் பலர்என முப்பாற் றுயர்திணை

14. ஒன்றே பலஎன் றிருபாற் றஃறிணை.

3 எண்

(நன். சூ.262)

(நன்.சூ.263)

67. எண் என்பது பொருள்களின் எண்ணிக்கை, அஃது ஒருமை, பன்மை என இருவகைப்படும். ஒன்றைக் குறிப்பது ஒருமை; பலவற்றைக் குறிப்பது பன்மை.

உ-ம். மகன், மகள், மரம், அது ஒருமை

மக்கள், மரங்கள், அவை - பன்மை.

தமிழிலக்கணத்தில் எண் பாலோடேயே சேர்ந்துள்ளது. பாலறியப் படாத தன்மை முன்னிலையிலே எண் தனித்து விளங்கும்.

4. இடம்

68. சொல்வோன், கேட்போன், சொல்லப்படும் பொருள் ஆகிய மூவிடங்களைக் குறிப்பது இடமாகும்.