உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

உ-ம். தன்மை:

முன்னிலை:

படர்க்கை:

இயற்றமிழ் இலக்கணம்

ஒருமை - யான், நான்

பன்மை - யாம், நாம், யாங்கள், நாங்கள்

-

ஒருமை - நீ

பன்மை - நீயிர், நீவிர், நீர், நீம், நீங்கள்

ஆண்பால்-மகன், அவன் பெண்பால் - மக்கள், அவர்கள் ஒன்றன்பால் - மாடு, அது. பலவின்பால் - மாடுகள், அவை.

5. வேற்றுமை

69. வேற்றுமை என்பது வேறுபாடு. பெயர்கள் தம் பொருளுக்கேற்ப வேறுபடும். அது வேற்றுமை யெனப்படும்.

இராமன் என்று சொல்லும்போது, வந்தான், போனான் என்றற் றொடக் கத்து வினைகட்கேற்ப அஃது எழுவா-த் தன்மை பெற்று நிற்கும். அது செயப்படுபொருட்டன்மை பெறவேண்டின், இராமனை என்று திரியும்; கரு விப் பொருட்டன்மை பெற வேண்டின், இராமனால் என்று திரியும். இங் ஙனம் திரியாமல் அது பிறபொருள்களை உணர்த்த முடியாது. இத் திரிபே வேற்றுமை யென்றும், இத் திரிபை யுணர்த்துங் குறியே வேற்றுமை யுரு பென்றுங் கூறப்படும். உருபு - உருவம் அல்லது வடிவம். வேற்றுமையுருபு, அசையாகவும் சொல்லாகவுமிருக்கும். இவை முறையே அசையுருபென் றும், சொல்லுருபென்றுங் கூறப்படும். சொல் தனித்துவரும்; அசை தனித்து வராது, பெயரைச் சார்ந்தே வரும்.

70. வேற்றுமை மொத்தம் எட்டு. இவை முறையே,

1. முதல் வேற்றுமை அல்லது எழுவா-வேற்றுமை. 2. இரண்டாம் வேற்றுமை அல்லது செயப்படுபொருள் வேற்றுமை.

3.மூன்றாம் வேற்றுமை அல்லது கருவி வேற்றுமை 4. நான்காம் வேற்றுமை அல்லது கொடை வேற்றுமை 5.ஐந்தாம் வேற்றுமை அல்லது நீக்க வேற்றுமை

6. ஆறாம் வேற்றுமை அல்லது கிழமை வேற்றுமை

7. ஏழாம் வேற்றுமை அல்லது இட வேற்றுமை

8. எட்டாம் வேற்றுமை அல்லது விளிவேற்றுமை எனப் பெயர் பெறும்.