உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

15. ஏற்கும் எவ்வகைப் பெயர்க்குமீ றா-ப்பொருள்

வேற்றுமை செ-வன எட்டே வேற்றுமை.

23

(நன்.சூ.291)

71. முதல் வேற்றுமை: பெயரின் இயல்பே முதல் வேற்றுமையாம். இதனால் இது பெயர் வேற்றுமை என்றுங் கூறப்படும்.

உ-ம். மகன், மாடு, மரம், மண்.

எல்லாப் பெயர்களும் இயல்பா எழுவா-த் தன்மை பெற்று நிற்கும் அதனால் பெயரையாவது வினையையாவது பயனிலையாகக் கொள்ளும்.

உ-ம். அவன் இராமன்

பெயர்ப் பயனிலை

புலவர் பாடினார்

தெரிநிலை

கடவுள் உண்டு

குறிப்பு

வினைப்பயனிலை

பண மில்லை

முதல் வேற்றுமை எழுவாயாயிருத்தலின் எழுவா- வேற்றுமை யெனப்படும். எழுவா-, கருத்தா, வினைமுதல், செ-பவன் என்பன ஒரு பொருட் சொற்கள்.

முதல் வேற்றுமைக்கு உருபில்லா திருப்பவும், ஆனவன், ஆனவள், ஆனவர், ஆனது, ஆனவை என்கின்ற ஐம்பாற் பெயர்களையும் என்பவன், என்பவள், என்பவர், என்பது, என்பன என்னும் ஐம்பாற் பெயர்களையும் உருபாகக் காட்டுவர். அவை முறையே ஆ, என் என்னும் வினைகளினடி யாகப் பிறந்த வினையாலணையும் பெயர்களே யன்றி உருபுகளாகா. ஆன வன் முதலிய ஐம்பாற் பெயர்களும், என்பவன் முதலிய ஐம்பாற் பெயர் களும், திணை பால் எண் இடங் காட்டி, ஆனவனை ஆனவனால், என்ப வனை என்பவனால் என வேற்றுமையுமேற்று வரும். இவ் விலக்கண பெயருக்கேயன்றி வேற்றுயுைருபிற்கில்லை. வேற்றுமை யுருபுகள் பெயரைச்சார்ந்தல்லது தனித்து வராத இடைச்சொற்கள். மேலும் ஆனவன் முதலிய ஐம்பாற் பெயரும் என்பவன் முதலிய ஐம்பாற் பெயரும் படர்க்கை யெழுவா- கட்கே பொருந்துவதன்றி, தன்மை முன்னிலை யெழுவா-கட் குப் பொருந்தாமை யுணர்க. முதல் வேற்றுமைக்கு உருபின்றேனும் பிற வேற் றுமைகளினின்றும் வேறுபடுவதனால், வேற்றுமை யெனப்படுகிறது.

16. எழுவா- உருபு திரிபில் பெயரே

வினைபெயர் வினாக்கொளல் அதன்பய னிலையே.

கள்

(நன்.சூ.295)

சூத்திரத்துள் வினா ஒரு தனிப்பயனிலையாகக் கூறப்பட்டுள்ளது. யார்? எது? முதலிய வினாச்சொற்கள் பெயரினுள்ளும் வந்தானா சென்றானா?