உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இயற்றமிழ் இலக்கணம்

முதலிய வினாச்சொற்கள் வினையினுள்ளும் அடங்குதலின், வினாவைத் தனித்துக் கூறவேண்டுவதின்று. அங்ஙனங் கூறின், ஐயம் முதலியவற்றை யும் தனித்துக் கூற வேண்டும்.

எழுவா- பெரும்பாலும் தன்மையிலும் முன்னிலையிலும் தோன்றா திருக்கும் அது தோன்றா எழுவா- எனப்படும்.

உ-ம். (நான்) வந்தேன்.

(நீ) வா, வந்தா-.

72. இரண்டாம் வேற்றுமை; இரண்டாம் வேற்றுமையாவது எழு வா-ப் பொருள் செயப்படுபொருளாக வேறுபடுவது. இதனால் இது செயப் படுபொருள் வேற்றுமை என்று கூறப்படும். இதற்கு உருபு 'ஐ'.

உ-ம். குடத்தை வனைந்தான். சோற்றை யுண்டான்.

செயப்படுபொருள் செ-பொருள் எனச் சுருக்கிக் கூறப்படும்.

73. மூன்றாம் வேற்றுமை: மூன்றாம் வேற்றுமையாவது எழுவா-ப் பொருள் கருவிப் பொருளாகவும், கருத்தாப் பொருளாகவும், உடனிகழ்ச் சிப் பொருளாகவும் வேறுபடுவது. இம் மூன்றனுள் கருவி சிறந்ததாகலின் இவ் வேற்றுமை கருவிவேற்றுமை யெனப்படும்.

74. இவ் வேற்றுமைக்கு ஆல், ஆன் என்பன கருவி கருத்தாப் பொருள் களிலும், ஒடு, ஓடு என்பன உடனிகழ்ச்சிப் பொருளிலும் வரும் உருபுகளாம்; உடன் என்பது உடனிகழ்ச்சிப் பொருளிலும் கொண்டு என்பது கருவிப் பொருளிலும் வரும் சொல்லுருபுகள்.

கருவி என்பது காரணத்தையுங் குறிக்கும்.

கருத்தாவும் ஒருவகைக் கருவியேனும் உயர்திணையாதலானும், செ-பவனாதலானும் கருத்தாவெனப் பிரித்துக் கூறப்பட்டது.

உடனிகழ்ச்சி யென்பது பல வினைகள் ஒருங்கு நிகழ்தல்.

உ-ம். உளியாற் பெட்டியைச் செ-தான். அவன் வந்ததனால் நான் வரவில்லை. எழுத்தாணிகொண் டெழுதினான்.

}

கருவி