உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

கரிகால் வளவனால் காவிரிப்பூம் பட்டினம் கட்டப்பட்டது.

}

கருத்தா

25

தச்சனால் வண்டி செ-யப்பட்டது.

டி

இராமனோடு இலக்குமணன் சென்றான்.

சம்பந்தர் சமணருடன் தருக்கித்தார்.

உடனிகழ்ச்சி

'இராமனோடு இலக்குமணன் சென்றான்' என்பதில் இராமன் செல வும், இலக்குமணன் செலவும் உடன் (ஒருங்கு) நிகழ்தல் காண்க.

75. நான்காம் வேற்றுமை: நான்காம் வேற்றுமையாவது, எழுவா-ப் பொருள் ஏற்றுக்கோடற் பொருளாக வேறுபடுவது. இதற்கு உருபு, 'கு'; பொருட்டு, நிமித்தம், ஆக என்பன சொல்லுருபுகள். இவற்றுள் ஆக என் பது குவ்வுருபோடு சேர்ந்தே வரும்.

உ-ம். சிபி புறாவுக்குத் தசையைக் கொடுத்தான். கூலியின் பொருட்டு வேலை செ-கிறான். தமிழுக்காகப் பாடுபட்டான்.

நான்காம் வேற்றுமைக்கும் பல பொருளிருப்பினும், கொடைச் சிறப்புப் பற்றிக் கொடை வேற்றுமையெனக் கூறப்படும். கொடையிலும் கொடுப் போனைக் குறியாது கொள்வோனையே குறித்தலால் கோளி வேற்றுமை யென்றுங் கூறப்படும். கோளி -கொள்பவன்.

76. ஐந்தாம் வேற்றுமை: ஐந்தாம் வேற்றுமையாவது எழுவா-ப் பொருள் நீக்கப் பொருளாக வேறுபடுவது. இதற்கு உருபு இன், இல் என் பன. இவற்றோடு சேர்ந்து இருந்து, நின்று என்பன சொல்லுருபுகளா- வரும்.

உ-ம்.

மலையின் வீழருவி. மலையிலிருந்து வந்த மரம்.

மரத்தினின்று விழுந்த மலர்.

ஐந்தாம் வேற்றுமைக்குப் பல பொருள்களுள. அவற்றுள் நீக்கப் பொருள் பெரும்பான்மை. இதனால் இது நீக்க வேற்றுமை என்று கூறப்படும்.

77. ஆறாம் வேற்றுமை: ஆறாம் வேற்றுமையானது எழுவா-ப் பொருள் கிழமைப் பொருளாக வேறுபடுவது. இதனால், இது கிழமைப் வேற்றுமை யென்று கூறப்படும். கிழமை உரிமை அல்லது உடைமை.

78. ஆறாம் வேற்றுமைக்கு அது, ஆது என்பன ஒருமை யுருபுகள்; அ என்பது பன்மை யுருபு; உடைய என்பது இருமைக்கும் பொதுவான சொல்லுருபு.