உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

உ-ம். கம்பரது கவித்திறம்.

எனாது கை.

ஒருமை

இயற்றமிழ் இலக்கணம்

இராமன் குணங்கள்.

எனபொருள்கள்.

இறைவனுடைய செயல்.

இறைவனுடைய செயல்கள்.

பன்மை

பொதுமை

இனி, அன் இன் என்பனவும் ஆறாம் வேற்றுமை யுருபாக வரும்

அவை இருமைக்கும் பொது.

உ-ம், ஒன்றன் பெயர்கள் - பன்மை

தமிழின் பெருமை - ஒருமை

தமிழின் பெருமைகள் - பன்மை.

79. ஏழாம் வேற்றுமை: ஏழாம் வேற்றுமையாவது எழுவா-ப் பொருள் இடப்பொருளாக வேறுபடுவது. இதனால் இஃது இடவேற்றுமை யென்று கூறப் படும். இதற்கு உருபு இல் என்பது. கண், கால் முதலியன சொல்லுருபுகள்.

17.

உ-ம். வீட்டில் இருக்கிறது.

மதியின்கண் மறு.

கண்கால் கடைஇடை தலைவா-திசைவயின்

முன்சார் வலம்இடம் மேல்கீழ் புடைமுதல்

பின்பாடு அளைதேம் உழைவழி உழிஉளி

உள்அகம் புறம்இல் இடப்பொரு ளுருபே.

(நன்.சூ.302)

இச் சூத்திரத்தில் சொல்லப்படாத சொல்லுருபுகளு முள. அவை பக் கம்,ஓரம்,மாடு, பாங்கர், கிட்ட, முகம், பால், புறம், அண்டை என்பன.

உ-ம். மலைப்பக்கம், ஆற்றோரம், தலைமாடு.

80. எட்டாம் வேறுமை: எட்டாம் வேற்றுமையாவது எழுவா-ப் பொருள் விளிப்பொருளாக வேறுபடுவது இதனால், விளிவேற்றுமை யென்று கூறப்படும். விளித்தல் - கூப்பிடுதல்.

முதல் வேற்றுமைக்குப் போலவே எட்டாம் வேற்றுமைக்கும் உரு பில்லை. ஆனால் முதல் வேற்றுமை இயல்பாயிருக்கும்; எட்டாம் வேற்றுமை விகாரப்படும். அவ் விகாரம் ஈறு திரிதல், ஈறு குன்றல், ஈறு மிகுதல், ஈற்றயல் திரிதல் எனப் பலவகை. இவ் விகாரங்களையே எட்டாம் வேற்றுமையுரு