உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

27

பாகப் பாவிக்கலாம். ஒரே பெயர் ஒரு விகாரமன்றிப் பல விகாரங்களை யடை வதுமுண்டு. குன்றல் - குறைதல் அல்லது கெடுதல்.

உ-ம்.

பிள்ளா-! நாரா-! - ஈறு திரிதல்.

அரச! நண்ப -ஈறுகுன்றல்.

கடவுளே! தாயே! - ஈறு மிகுதுல்.

மக்காள்! அன்பர்காள்! - ஈற்றயல் திரிதல்.

விளி

அண்ணா! - ஈறு குன்றலும் அயல் திரிதலும்

அண்ணாவோ! - ஈறு குன்றலும், அயல் திரிதலும், ஈறுமிகுதலும்.

அண்மை விளி, சே-மை விளி என இருவகைப்படும். அண்மை சமீபம். சே-மை தூரம். அண்மை விளி பெரும்பாலும் இயல்பாயிருக் கும். இஃது இயல்பு விளி யெனப்படும்.

உ-ம். தம்பி! சுந்தரம்!

சில விளிப்பெயர்கள் முதல் வேற்றுமைப் பெயர்களாகவே உலக வழக் கில் வழங்குகின்றன.

உ-ம்.

ஐயா, அப்பா.

18.

எட்டன் உருபே எ-துபெயரீற்றின்

திரிபு ஏன்றல் மிகுதல் இயல்பயல்

திரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத்

தன்முக மாகத் தானழைப் பதுவே.

(நன்.சூ.303)

வேற்றுமை யுருபுகள் சில விடத்துத் தாக்கு (மறைந்து) வருவது முண்டு. அது வேற்றுமைத் தொகை எனப்படும்.

உ-ம்.

பாடம் படித்தான்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

கல்லெறிந்தான்

மூன்றாம் வேற்றுமைத் தொகை

ஊர் போனான்

நான்காம் வேற்றுமைத் தொகை

மலைவீழருவி

ஐந்தாம் வேற்றுமைத் தொகை

கபிலர் அகவல்

ஆறாம் வேற்றுமைத் தொகை

கூடு பா-ந்தான்

ஏழாம் வேற்றுமைத் தொகை

ஒரு வேற்றுமை யுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளில் வருவது முண்டு, அது வேற்றுமை மயக்கம் எனப்படும். மயக்கம் கூட்டம் அல்லது கலப்பு