உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

வினைச்சொல்

85. வினைச்சொல், முற்று எச்சம் என இருவகைப்படும். முறையே முற்றுவினை, எச்சவினை எனக் கூறப்படும்.

29

86. முற்றுவினையாவது முடிந்த பொருளையுடைய வினைச்சொல். முற்றுதல் - முடிதல்.

உ-ம்

இராமன் வந்தான். மாடு மே-கிறது. மழை பெ-யும்.

இவ் வாக்கியங்களுள் வந்தான், மே-கிறது, பெ-யும் என்னும் முற்று வினைகள் பிற சொல்லை வேண்டாது தாமே பொருள் முடிந்து நிற்றல் காண்க.

முற்றுவினை வினைமுற்றென்று மாற்றியுங் கூறப்படும்.

87. எச்சவினையாவது எஞ்சிய (குறைந்த) பொருளையுடைய வினைச் சொல். அது தானே பொருள் முடியாது, வேறொரு பெயரையாவது வினையை யாவது கொண்டு பொருள் முடியும். பெயரைக்கொண்டு முடிவது பெயரெச்ச மென்றும், வினையைக்கொண்டு முடிவது வினையெச்ச மென்றும்

கூறப்படும்.

உ-ம்.

வந்த பையன் - பெயரெச்சம்

வந்து போனான் - வினையெச்சம்

வந்த என்பது பையன் என்னும் பெயரையும், வந்து என்பது போனான் என்னும் வினையையும் கொண்டு பொருள் முடிதல் காண்க.

88. வினைச்சொல் பகுதி, விகுதி, சந்தி, சாரியை, இடைநிலை, விகாரம் என்னும் ஆறுறுப்புகளை ஏற்றுவரும். அவற்றுள் பகுதி, விகுதி, இடை நிலை என்னும் மூன்றும் முக்கியமானவை.

பகுதி எப்போதும் முதலில் இருக்கும். அதனால் முதனிலையென்று கூறப்படும். விகுதி எப்போதும் இறுதி (கடைசி)யில் இருக்கும். அதனால் இறுதிநிலை யென்று கூறப்படும். இடைநிலை எப்போதும் அவ் விரண்டிற் கும் இடையிலிருக்கும்.

ஒரு வினைச்சொல்லில், பகுதி வினையையும் இடைநிலை காலத்தை யும், விகுதி திணை பால் எண் இடங்களையும் எச்சத்தையுங் காட்டும்.