உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பகுதி

உ-ம்.

இயற்றமிழ் இலக்கணம்

செ-கிறான். இதில் செ- என்பது வினையையும், கிறு என்பது

(நிகழ்) காலத்தையும், ஆன் என்பது திணைபால் எண் இடங் களையும் காட்டினமை காண்க.

செ-து, என்பதில் உ என்னும் விகுதி எச்சத்தைக் காட்டிற்று.

89. வினைப் பகுதிகள் பெருபாலும் ஏவலொருமை வடிவா- நின் றும், சிறுபான்மை திரிந்து நின்றும் வினையை யுணர்த்தும்.

உ-ம்.

திரியாதன: ஏவலொருமை

நட

போ

இரு

படி

எழு

திரிவன:

ஏவலொருமை

வா

தா காண் நொ

சா

வினைப்பகுபதம்

நடந்தான், நடக்கிறான், நடப்பான் போனான், போகிறான், போவான் இருந்தான், இருக்கிறான், இருப்பான் படித்தான், படிக்கிறான் படிப்பான் எழுந்தான், எழுகிறான், எழுவான்.

வினைப்பகுபதம்

வந்தான், வருகிறான், வருவான்

தந்தான், தருகிறான், தருவான்

கண்டான், காண்கிறான், காண்பான்

நொந்தான், நோகிறான், நோவான் செத்தான், சாகிறான், சாவான்

விகுதி

90. வினைமுற்று விகுதிகள் திணை, பால், எண், இடம் என்பவற்றைக் காட்டும்.

91. தன்மை வினைமுற்று விகுதிகளும், முன்னிலை வினைமுற்று விகுதிகளும் எண் இடம் என்ற இரண்டையுமே காட்டும். படர்க்கை வினை முற்று விகுதிகளே திணை, பால், எண், இடம் என்ற நான்கையும் காட்டும்.

தன்மை முன்னிலைப் பெயர்களைப் போலவே தன்மை முன்னிலை வினைகளும் இருதிணைக்கும் பொதுவாம்.

தன்மை வினைமுற்று விகுதிகள்

92. அல், அன், என், ஏன் என்பன தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகளாகும்.