உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

உ-ம். வருவல், வருவன், வந்தனென், வந்தேன்.

படிப்பல், படிப்பன், படித்தனென், படிப்பேன்.

31

93.அம், ஆம், எம், ஏம், ஓம் என்பன தன்மைப் பன்மை வினை முற்று விகுதிகளாகும்.

உ-ம்.

செ-தனம், செ-வாம், செ-கின்றனெம், கூறினேம், கூறினோம்.

முன்னிலை வினைமுற்று விகுதிகள்

94. ஐ, ஆ-, தி என்பன முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி களாகும்.

உ-ம்.

உண்டனை, உண்டா-, உண்ணுதி,

வந்தை, வருகின்றா-, வருதி.

95. இர், ஈர், கள், என்பன முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி களாகும். அவற்றுள் கள் என்பது விகுதிமேல் விகுதியாவரும்.

உ-ம்.

செ-தனிர், செ-தீர், செ-தீர்கள்.

நடந்தனிர், நடக்கின்றீர், நடப்பீர்கள்.

96. ஏவல் வினைகளில், ஒருமை ஏவல் விகுதி பெறாதும் 'தி' விகுதி பெற்றும் வரும்; பன்மை ஏவல் மின், உம், கள் என்னும் விகுதிகளைப் பெற்று வரும். அவற்றுள் கள் என்பது விகுதிமேல் விகுதியாவரும்.

உ-ம். வா, வருதி

ஒருமை.

வம்மின். போமின்.

செ-யும், செ-யுங்கள்.

}

பன்மை

படர்க்கை வினைமுற்று விகுதிகள்

97. அன், ஆன் என்பன உயர்திணை ணை ஆண்பாற் படர்க்கை வினை முற்று விகுதிகளாகும்.

உ-ம்.

படித்தனன், படிக்கின்றான்.

98. அள், ஆள் என்பன உயர்திணைப் பெண்பாற் படர்க்கை விகுதிகள்.

உ-ம்.

படித்தனள், படிக்கின்றாள்.