உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இயற்றமிழ் இலக்கணம்

99.அர், ஆர்,ப என்பன உயர்திணைப் பலர்பாற் படர்க்கை விகுதி கள். ஆர் விகுதியோடு கள் என்பது விகுதிமேல் விகுதியா-வரும்.

உ-ம்.

படித்தனர், படிக்கின்றார், படிப்ப. கூறினர், கூறினார், கூறுப.

படிக்கின்றார்கள்.

100. து, று, டு என்பன அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை விகுதிகள்.

உ-ம். வந்தது, ஆயிற்று, உண்டு.

101. அ, ஆ என்பன அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை விகுதிக ளாகும். 'அ' என்பது உடன்பாட்டிலும், 'ஆ' என்பது எதிர்மறையிலும் வரும்.

உ-ம்.

உண்ணுகின்றன - உடன்பாடு. உண்ணா - எதிர்மறை.

இடைநிலை

102. இடைநிலைகள் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலங் காட்டும்.

103. காலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூவகைப்படும்.

-

இறந்தகாலம் முன்னே கடந்துபோன காலம். நிகழ்காலம் இப்போது நடக்கின்ற காலம். எதிர்காலம் இனிமேல் வருங்காலம். இறத்தல் - கடத்தல். நிகழ்தல் - நடத்தல்.

19. இறப்பெதிர்வு நிகழ்வெனக் காலம் மூன்றே.

இறந்தகால இடைநிலைகள்

104. த், ட், ற், இன் என்பன இறந்தகால இடைநிலைகளாம்.

(நன்.சூ.382)

ன்

உ-ம்.

த்படித்தான்

ட் - உண்டான்

இன் - உறங்கினான்.

இன் என்னும் இடைநிலை ன் என முதல் குறைந்தும், இ எனக் கடை குறைந்தும் நிற்கும்.

ற் - சென்றான்.

உ-ம்.

போனான் - போ + ன் +

ஆ ன்

சொல்லியது - சொல் + இ + அ + து