உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

20.

தடறவொற் றின்னே ஐம்பால் மூவிடத்

திறந்த காலம் தரும்தொழி லிடைநிலை.

33

(நன்.சூ.142)

இனி, - என்பதும் ஒர் இறந்தகால இடைநிலை யாகும்.

உ-ம்.

-

போயது - போ + - + அ + து.

சில வினைகள் இடைநிலை பெருமற் பகுதி யிரட்டித்து இறந்தகாலங் காட்டும்.

உ-ம். புகு-புக்கான் சுடுசுட்டான் அறு - அற்றான்.

புகு என்பது புகுந்தான் என்று த் இடைநிலை பெற்றும் இறந்தகாலங் காட்டும்.

நிகழ்கால இடைநிலைகள்

105. கிறு, கின்று, ஆதின்று என்பன நிகழ்கால இடைநிலைகள்.

உ-ம்.

உண்கிறான், உண்கின்றான், உண்ணாநின்றான்.

உண்ணாநின்றான் என்பது உண்டு நின்றான் என்றும், உண்ணாமல் நின்றான் என்றும் பொருள்படும்போது நிகழ்கால வினைமுற்றாகாது. அது உண்ணா என்னும் எச்சமும், நின்றான் என்னும் வினைமுற்றும் சேர்ந்த தொடர்மொழியாகும். உண், ஆநின்று, ஆன் எனப் பிரிந்து, உண்கின்றான் எனப் பொருள்படும்போதே நிகழ்கால வினைமுற்றாகிய தனிமொழியாகும். ஆநின்று என்னும் இடைநிலை உலகவழக்கில் வராது.

21. ஆநின்று கின்று கிறுமூ விடத்தின் ஐம்பால் நிகழ்பொழு தறைவினை இடைநிலை.

22.

எதிர்கால இடைநிலைகள்

106. ப், வ் என்பன எதிர்கால இடைநிலைகள். வ்

உ-ம்.

படிப்பான், உண்பான் - ப்

போவான், வருவான் வ்

-

ப, வ மூவிடத் தைம்பால் எதிர்பொழு திசைவினை இடைநிலை யாமிவை சிலவில.

சில வினைகள் விகுதியால் எதிர்காலங் காட்டும்.

(நன்.சூ.143)

(நன். சூ.144)

உ-ம்.

கூறுப (கூறுவார்)-ப

வரும் - உம்