உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இயற்றமிழ் இலக்கணம்

ஏவல் வினைகள் எந்த உறுப்பினாலும் காலங் காட்டுவதில்லை. ஆனால், ஏவின வினைகளெல்லாம் ஏவினபிறகே செ-யப்படுவதால், ஏவல் வினைகளெல்லாம் எதிர்காலமென் றறியப்படும்.

தன்வினை, பிறவினை

107. வினைகளெல்லாம் கருத்தாப்பற்றித் தன்வினை, பிறவினை என இருவகைப்படும்.

108. தன்வினையாவது ஒருவன் தானே செ-யும் வினை.

உ-ம்.

வந்தான், சென்றான்.

109. பிறவினையாவது ஒருவன் பிறனைக்கொண்டு செ-விக்கும் வினை.

உ-ம்.

வருவித்தான், செலுத்தினான்.

தன்வினையிலிருந்தே பிறவினை யுண்டாகும்.

தன்வினை பிறவினையாகும் வகைகள்

(1) விகுதிப்பேறு: சில தன்வினைகள் வி, பி, சு, து என்ற விகுதிகளில் ஒன்றைப் பெற்றுப் பிறவினையாகும்.

உ-ம்.

வி - வருவி, தருவி, எழுதுவி.

-

- உண்பி.

சு-பா-ச்சு, கா-ச்சு.

து - (புகு+து) புகுத்து.

து - (உருள் + து) உருட்டு.

து - (பயில் + து) பயிற்று.

(2). வலியிரட்டல்: சில தன்வினைகள் வல்லெழுத்து இரட்டித்துப் பிற வினையாகும்.

உ-ம்.

போகு - போக்கு.

பழகு -பழக்கு.

(போகு-பகுதி)

ஆடு-ஆட்டு.

உருகு -உருக்கு.

ஆடு-ஆற்று. தேறு தேற்று.

(3) பகுதி வலித்தல்: சில தன்வினைகள் வலித்தல் விகாரத்தால் பிறவினையாகும். வலித்தல், மெல்லினம் வல்லினமாதல்.