உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

உ-ம். கலங்கு - கலக்கு. எழும்பு -எழுப்பு.ஈண்டு - ஈட்டு.

பொருந்து பொருத்து. தோன்றுதோற்று.

35

தோற்று என்பது இக்காலத்தில் பிறவினைப் பொருளிழந்து தன்வினை யாகவே வழங்குகின்றது.

(4).இடைநிலை வலித்தல்: சில வினைகள் பகுதியளவில் இருவினை க்கும் பொதுவாதலின், இடைநிலை வலித்துப் பிறவினையாகும்.

இடைநிலை யென்றது இடையிலிருக்கும் எழுத்தை.

உ-ம்.

இறந்தகாலம்:

தே-ந்தான் - தே-த்தான்.

குறைந்தான் - குறைத்தான்.

அழிந்தான் – அழித்தான்.

நிகழ்காலம்:

}

சந்தி வலித்தல்

கெடுகிறான்- கெடுக்கிறான் - வலிமிகல்.

எதிர்காலம்:

ஒழிவான் -ஒழிப்பான் - வலிமிகலும் இடைநிலை வலித்தலும்.

(5) பிறவினைப் பொருள்: சில வினைகள் எல்லா வடிவிலும் தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாயிருத்தலால். பிறவினைப் பொரு ளாலேயே பிறவினை என்று அறியப்படும்.

தன்வினை

பிறவினை

உ-ம்.

விறகு பிளந்தது. கதவு திறந்தது.

விறகைப் பிளந்தான். கதவைத் திறந்தான்.

துணியை வெளுத்தான்.

துணி வெளுத்தது.

உலக வழக்கில் சில தன்வினைகளில் எச்சத்தோடு செ-, வை முத லிய துணை வினைகளைச் சேர்த்துப் பிறவினையாக வழங்குவர்.

உ-ம்.

படி படிக்கச்செ-

படிக்கப்பண்

படிக்கச்சொல்

நிகழ்கால வினையெச்சமும் துணை வினையும்

படிக்கவை

படிக்கப்போடு

படித்துக்கொடு

இறந்தகால வினையெச்சமும் துணை வினையும்.