உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இயற்றமிழ் இலக்கணம்

14.பெயரெச்சமும் வினையெச்சமும்

110. எச்சவினை பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும். பெயரைத் தழுவுவது பெயரெச்சம். வினையைத் தழுவுவது வினையெச்சம்.

உ-ம்.

வந்த பையன் -வந்த பெயரெச்சம்.

வந்து பொனான் - வந்து வினையெச்சம்.

111. பெயரெச்சம்: பெயர் எஞ்ச நிற்பது அல்லது பெயராகிய எச்சத்தை யுடையது பெயரெச்சம். அது காலம்பற்றி இறந்தகாலப் பெயரெச்சம், நிகழ் காலப் பெயரெச்சம், எதிர்காலப் பெயரெச்சம் என மூவகைப் படும். எஞ்சுதல்- குறைதல்.

112. செ-த, செ-கின்ற, செ-யும் என்பவை முறையே முக்காலப் பெயரெச்ச வா-பாடுகளாகும். வா-பாடு மாதிரி அல்லது வடிவம். செ- கின்ற என்பது செ-கிற என்று மிருக்கும்.

உ-ம். இ.கா.பெயரெச்சம்

செ-த

படித்த

உண்ட

நடந்த

நி.கா.பெயரெச்சம்

எ.கா. பெயரெச்சம்

செ-கின்ற

செ-யும்

படிக்கின்ற

படிக்கும்

உண்கின்ற

உண்ணும்

நடக்கின்ற

நடக்கும்

இறந்தகாலப் பெயரெச்சத்திற்கும், நிகழ்காலப் பெயரெச்சத்திற்கும் 'அ' விகுதி; எதிர்காலப் பெயரெச்சத்திற்கு 'உம்' விகுதி.

113. பெயரெச்சங்களில் பகுதி வினையையும், இடைநிலை காலத்தை யும், விகுதி எச்சத்தையு முணர்த்தும். வினைமுற்று விகுதிபோல் பெய ரெச்ச விகுதி திணை பாலிடங் காட்டுவதில்லை. எதிர்காலப் பெயரெச்சத் திற்கு இடைநிலை யின்மையால் அதன் விகுதியே காலங் காட்டும்.

உ-ம்.

-

செ-த செ- பகுதி வினை யுணர்த்திற்று. த் இடைநிலை கால முணர்த்திற்று. அ விகுதி எச்ச முணர்த்திற்று.

செ-யும் - உம் விகுதி எச்சத்தையும் காலத்தையு முணர்த்திற்று.

114. பெயரெச்சம் செ-பவன், கருவி, நிலம், செயல், காலம், செ- பொருள் என்னும் அறுவகைப் பெயர்களையும் தழுவிவரும்.

உ-ம்.

வனைந்த குயவன் - செ-பவன்

வனைந்த மண் -கருவி