உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

39

உடன்பாட்டுவினை ஒன்றை விதித்தலின், விதிவினை யென்றும் எதிர் மறைவினை ஒன்றை விலக்குதலின், விலக்குவினை யென்றுங் கூறப்படும்.

உ-ம். வந்தான், சென்றான்

உடன்பாட்டுவினை.

வந்திலன், வரவில்லை, வரான் - எதிர்மறைவினை.

முற்றுவினையைப் போலவே எச்சவினையும், உடன்பாடாகவும் எதிர் மறையாகவு மிருக்கும். உடன்பாட்டுப் பெயரெச்சமும் உடன்பாட்டு வினை யெச்சமும் முன்னர்க் கூறப்பட்டன. இங்கு எதிர்மறைப் பெயரெச்சமும் எதிர்மறை வினையெச்சமுங் கூறப்படும்,

120. எதிர்மறைப் பெயரெச்சம்: ஒரு வினை நிகழ்ச்சியின் உண்மையை, மறுக்கும் அல்லது இன்மையை உணர்த்தும் பெயரெச்சம் எதிர்மறைப் பெயரெச்சம். அது 'ஆ' என்னும் இடைநிலையைப் பெற்று வரும். அஃது எதிர்மறை இடைநிலை எனப்படும்.

உ-ம்.

காணாத (காட்சி)

காண் பகுதி; ஆ எதிர்மறை இடை நிலை; த்

எழுத்துப்பேறு; அ பெயரெச்ச விகுதி.

படியாத (மனிதன்) - படி பகுதி; ஆ எதிர்மறை இடை நிலை; த் எழுத்துப்பேறு; அ பெயரெச்ச விகுதி.

121. எதிர்மறைப் பெயரெச்சம் ஈறு கெட்டு வருவது முண்டு. அஃது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச மெனப்படும்.

உ-ம்.

உண்ணாக் குதிரை

பறவாக் கொக்கு

த என்னும் ஈறு கெட்டது.

122. எதிர்மறை வினையெச்சம்: ஒருவினை நிகழ்ச்சியின் உண்மையை மறுக்கும் அல்லது இன்மையை உணர்த்தும் வினையெச்சம், எதிர்மறை வினையெச்சம். அஃது ஆ என்னும் இடைநிலையையும், து, மல், மே, மை என்னும் விகுதிகளில் ஒன்றையும் பெற்றுவரும்.

உ-ம்.

து

உண்ணாது (வந்தான்) உண்ணாமல் (வந்தான்) - மல்

உண்ணாமே (வந்தான்) - மே

உண்ணாமை (வந்தான்) - மை

123. எதிர்மறை வினையெச்சம் ஈறு கெட்டுவரின் ஈறுகெட்ட எதிர் மறை வினையெச்ச மெனப்படும்.