உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இயற்றமிழ் இலக்கணம்

உ-ம். உண்ணாச் சென்றான் - உண்ணாது சென்றான்; து என்னும் விகுதி கெட்டது.

இடைச்சொல்

124. இடைச்சொல் என்பன பெரும்பாலும் தனித்து வராமல், பெயரையும் வினையையும் அகத்துறுப்பாகவும் புறத்துறுப்பாகவும் சார்ந்துவரும் பல வகைச் சொற்கள்.

பெயரிடத்தும் வினையிடத்தும் வருவதால் இடைச்சொல் எனப் பட்டது, இடை -இடம்.

இடைச்சொற்கள் எழுத்து அசை, சொல் என்னும் மூவகையாக

இருக்கும்.

125. வேற்றுமை யுருபுகளும், பகுதி யொழிந்த பகுபதவுறுப்பு களும், உவமையுருபுகளும், சுட்டெழுத்துகளும், வினாவெழுத்து களும், பல்வகைக் குறிப்புகளும், இசைநிறையும், அசைநிலையும், இரட் டைக்கிளவியும், பிறவும் இடைச்சொற்களாம்.

உ-ம்.

வேற்றுமை யுருபுகள் - ஐ, ஆல், முதலியன. பகுதி யொழிந்த பகுபத வுறுப்புகள்:

விகுதி - அன், ஆன் முதலியன.

சந்தி - பகுதியும் பிற வுறுப்பும் புணரும்போது இடையில் தோன்றும் எழுத்துகள்.

சாரியை. i. எழுத்துச் சாரியை - கரம் காரம் முதலியன. 11. சொற்சாரியை - அத்து, அம் முதலியன.

-

இடைநிலை i. பெயரிடைநிலை - ச், ஞ் முதலியன.

ii. வினையிடைநிலை -த், ட் முதலியன.

விகாரம்-பகுதியின் விகராம்.

உவமை உருபுகள் - போல, புரைய முதலியன. சுட்டெழுத்துகள் - அ, இ, உ என்பன. வினாவெழுத்துகள் - ஆ, எ, ஏ, ஒ, யா என்பன.

பல்வகைக் குறிப்புகள்:

ஒலிக் குறிப்பு - ஒல், கொல், கலீர், சோ முதலியன. பண்புக் குறிப்பு -வெளேர், கரேர் முதலியன. அச்சக் குறிப்பு - துண், திடுக்கு முதலியன. இரக்கக் குறிப்பு - ஐயோ, அந்தோ முதலியன. வியப்புக் குறிப்பு - அம்மா, ஆகா முதலியன.