உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

இசைநிறை -செ-யுளில் இசைநிறைக்க வரும் ஏ முதலியன.

அசைநிலை -i. செ-யுளில் இசைநிறைக்க வரும் மற்று ஏ முதலிய அசைச்சொற்கள்.

ii. ஆம், ஆம், நல்லது நல்லது என உலக வழக்கில் வரும்

அசைநிலைகள்.

இரட்டைக்கிளவி - கலகல, மடமட முதலியன.

41

இனி, தனித்து வந்து தத்தம் பொருளை யுணர்த்தும் இடைச்சொற்கள் தான், மற்று, பிற, என, என்று முதலியன.

உரிச்சொல்

126. உரிச்சொல் செ-யுட்கே யுரித்தா- இடம்நோக்கிப் பொருளுணரப் படும் அருஞ் சொல்லாகும்.

உ-ம்.

கழிநெடில் கழி = மிக.

கடிவினை - கடி = திருமணம்.

தடந்தோள் - தடம் = பெருமை.

வயவேந்தர் வயம் = வெற்றி.

புணரியல்

127. சொற்கள் ஒன்றோடொன்று புணர்வது புணர்ச்சியாகும். புணர் தல் -பொருந்துதல்.

புணர்ச்சி வடமொழியில் சந்தி எனப்படும்.

128. புணர்கின்ற இரு சொற்களில் முந்தினது நிலைமொழி யென்றும், பிந்தினது வருமொழி யென்றுங் கூறப்படும்.

முதலாவது நிற்கின்ற மொழி நிலைமொழி. இரண்டாவது அதனொடு கூட வருகின்றமொழி வருமொழி.

உ-ம்.

இராமண் வந்தான் - இராமன் - நிலைமொழி.

வந்தான் - வருமொழி.

129. புணர்ச்சி இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என இருவகைப்படும்.

130. இயல்பு புணர்ச்சியாவது யாதொரு விகாரமுமின்றி இயல்பாகப் புணர்தல்.