உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

உ-ம்.

இயற்றமிழ் இலக்கணம்

இராமன் + வந்தான் = இராமன் வந்தான்.

கடவுள் + இருக்கிறார் = கடவு ளிருக்கிறார்.

உயிரும் மெ-யும் சேர்ந்து உயிர்மெ-யாவது இயல்பாதலின், விகார

மாகாது.

25. விகார மனைத்து மேவல தியல்பே.

(நன்.சூ.153)

131. விகராப் புணர்ச்சியாவது ஏதேனுமோர் விகாரந் தோன்றப் புணர் தல். அவ் விகராம் தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும். விகா ரம் - வேறுபாடு.

தோன்றல் என்பது, ஏதேனுமோர் எழுத்து அல்லது அசை புதிதாகத்

தோன்றுதல்.

உ-ம்.

வாழை + கா = வாழைக்காஎழுத்துத் தோன்றல்.

புளி + பழம் = புளியம்பழம் - அசை தோன்றல்.

தோன்றல் விகாரமே பகுபதத்திற் சந்தி யெனப்படும்.

திரிதல் என்பது ஏதேனுமோர் எழுத்து இன்னோரெழுத்தாகத் திரிதல். திரிதல் மாறுதல்.

-

உ-ம்.

பல் + பொடி = பற்பொடி.

கெடுதல் என்பது முன்னுள்ள எழுத்து, கெடுதல்.

உ-ம்.

அறம் + வினை = + வினை = அறவினை.

ஒரே புணர்ச்சியில் பல விகாரங்கள் வருவது முண்டு.

உ-ம்.

பனை +

26.

கா = பனங்கா-. இதில் நிலைமொழியீற்று ஐகாரங் கெட்டு அம் சாரியை தோன்றி, அதன் ஈற்று மகரம் ஙகரமாகத் திரிந்தது.

தோன்றல், திரிதல், கெடுதல், விகாரம்

மூன்றும் மொழிமூ விடத்து மாகும்.

1. இயல்பு புணர்ச்சி

i. வினாவின் முன்னும் விளிப்பெயர் முன்னும் வல்லினம்.

(நன். சூ.154)

132. நிலைமொழி யீற்றிலுள்ள ஆ, ஏ, ஓ என்னும் வினாவெழுத்து களுக்கும் யா என்னும் வினாப்பெயருக்கும், எல்லா விளிப்பெயர்களுக் கும் முன், வருமொழி முதலில் வலிவரின் இயல்பாம்.

யா = யாவை. வலி = வல்லினம்.