உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

1.உழவு

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் 10. தொழில்கள்

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே”

66

(புறம்.18)

உழுவார் உலகத்திற் காணியஃ தாற்றா

தெழுவாரை யெல்லாம் பொறுத்து"

(குறள்.1032)

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்

(சிலப். 10:151-2)

உழவிடை விளைப்போர்”

உழவர், ஆதலால், ஒருநாட்டு வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை உழவு என்பதைப் பண்டைத் தமிழ் மக்கள் உணர்ந்திருந் தனர்.

உழவுதொழிற்கு இன்றியமையாதவை நிலம், நீர், விதை, எருது என்னும் நான்காம்.

பண்டைத் தமிழர், ஐந்திணைகளுள் மருதத்தையும் நெய்தலையும் மென்புலமென்றும், குறிஞ்சியையும், முல்லையையும் வன்புலமென்றும், வகுத்திருந்தனர். மருதநிலத்தை நாடு என்றும், மற்ற நிலங்களைக் காடு என்றும் அழைத்தனர். குறிஞ்சி நிலத்தில் உழத்தக்க இடத்தை ஏர்காடு என்றும், உழத் தகாததைக் கொத்துக் காடு என்றும், பகுத்தனர். குறிஞ்சியிலும் முல்லையிலுமுள்ள விளை நிலங்கள் கொல்லை அல்லது புனம் என்றும், மருதநிலத்திலுள்ள விளைநிலங்கள் செய் என்றும், புதுக் கொல்லை இதை என்றும், பழங் கொல்லை முதை என்றும், சிறிது செய்யப் பெற்ற செய் புன்செய் என்றும், நன்றாய்ச் செய்யப் பெற்ற செய் நன்செய் என்றும் பெயர் பெற்றன. செய்தல் என்பது திருத்துதல் அல்லது பண்படுத்துதல். புன்மை சிறுமை.

கொல்லை என்பது வான வாரிக் காடென்றும், புன்செய் கிணற்றுப் பாய்ச்சலென்றும், நன்செய் ஆற்று அல்லது ஏரிப் பாய்ச்சலென்றும், அறிதல் வேண்டும். எள், கொள் முதலியன கொல்லைப் பயிர்; கேழ்வரகு, சோளம் முதலியன புன்செய்ப் பயிர்; நெல், கரும்பு முதலியன நன்செய்ப் பயிர்.

நன்செய்களுள், பழமையானது பழனம் என்றும், போரடிக்கும் கள முள்ளது கழனி என்றும், சொல்லப் பெறும். பண்ணை என்பது பண் ணப்பட்டது (பண்படுத்தப்பட்டது) என்னும் பொருள தேனும், வழக்கில் களமர் அல்லது செறுமர் என்னும் பண்ணையாட்கள் குடியிருந்து வேலை செய்யும் பெரிய வயற்பரப்பையே (farm) குறிக்கும். சேறுள்ளமையால் செறு என்றும், வைப்புப் போன்றமையால் வயல் என்றும், நன்செய்க்குப் பெயர்களுண்டு.