உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

81

கட்டிவிட்டனர் என்றும், என் 'தமிழர் மதம்' என்னும் நூலில் விரிவாய் விளக்கப் பெறும்.

கடவுள் நெறி

ஊர்பேர் குணங்குறியற்று, மனமொழி மெய்களைக் கடந்து எங்கும் நிறைந்திருத்தல், எல்லாம் அறிந்திருத்தல், எல்லாம் வல்லதாதல், என்று முண்மை, அருள்வடிவுடைமை, இன்ப நிலைநிற்றல், ஒப்புயர் வின்மை, மாசுமறுவின்மை ஆகிய எண்குணங்களை யுடையதாய் எல்லாவுலகங் களையும் படைத்துக் காத்தழித்துவரும் ஒரு பரம் பொருளுண்டென்று நம்பி, அதனை வழிபடுவதே கடவுள் நெறியாம். இது சித்தமதம் எனவும் படும்.

எல்லாவற்றையும் கடந்திருப்பதனாலேயே இறைவனுக்குக் கடவுள் எனப் பெயரிட்டனர். ஆரியர் வந்தபின், இச்சொல் முதலிற் பெருந் தெய்வங்கட்கும், பின்பு சிறு தெய்வங்கட்கும், இறுதியில் மக்களான முனிவர்க்கும் வழங்கி இழிவடைந்துள்ளது.

திருவள்ளுவர் தம் நூன் முகத்திற் கூறியிருப்பது உருவமற்ற கடவுள் வழுத்தே. தமிழரின் உருவவணக்கமல்லாக் கடவுள் வழிபாட்டை"உளி யிட்ட கல்லையும்” “எட்டுத் திசையும்" என்னும் பட்டினத்தடிகள் பாடலையும் "அங்கிங்கெனாதபடி”, “பண்ணேன் உனக்கான பூசை” என்னும் தாயுமானவர் பாடலையும் நோக்கியுணர்க.

இதன் விரிவை என் தமிழர் மதம் என்னும் நூலிற் கண்டு கொள்க. கடவுளையும் மறுமையையும் நம்பாத ஒரு சிறு கூட்டத்தாரும் அக்காலத்திருந்தனர். ஆயின், அறிஞர் அவரைக் கண்டித்தனர்.

உலகத்தார் உண்டெண்ப தில்லென்பான் வையத்

தலகையா வைக்கப் படும்.”

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்

இல்லை யென்போர்க் கினனா கிலியர்."

"மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம் பெறுமாறு செய்ம்மின்என் பாரே - நறுநெய்யுள் கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்று பவர்.”

(குறள்.850)

(புறம்.29:11-12)

(பழமொழி, 108).