உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

83

புனமாயினும் புன்செயாயினும், பண்டைத்தமிழர் மேட்டு நிலத்திற் பயிர் செய்ய விரும்பவில்லை. மேடு சுவல் என்றும் பள்ளம் அவல் என்றும் பெயர் பெறும்.

"மேட்டுப் புன் செயை உழுதவனும் கெட்டான், மேனி மினுக்கியை மணந்தவனும் கெட்டான்” என்பது பழமொழி.

நன்செய்ப் பாசனத்திற்கு, ஆற்றுநீர் இல்லாவிடங்கட்குக் கண்ணாறு களும் கால்வாய்களும் வெட்டிப்பாய்ச்சினர். அது இயலா விடத்து ஏரிகளை வெட்டினர். ஏர்த் தொழிற்கு உதவுவது ஏரி. குளிப்பது குளம். இன்று ஏரியைத் தவறாகக் குளமென்பர் ஒரு சாரார். இயற்கையாக உண்டான ஏரி அல்லது குளம் பொய்கை எனப்படும். முல்லை நிலத்திற் புன்செய்ப் பாசனத்திற்குக் கிணறுகளை வெட்டினர்.

எருதுகளைக் கொண்டு கிணற்று நீரை இறைக்கும் ஏற்றம் கம்மாலை எனப்பட்டது. அம் = நீர், அம் - கம் = நீர். கம் + ஆலை = கம்மாலை. ஆலை சுற்றி வருவது. கரும்பாலை என்பதை நோக்குக. ஆலுதல் ஆடுதல். முதற்காலத்தில் எருதுகள் ஒரு மரத் தூணைச் சுற்றி வந்தன. கம்மாலையென்பது இன்று கமலை என்றும் கவலை என்றும் திரிந்து வழங்குகின்றது. இன்றும் கமலையாடுதல் என்னும் வழக்கை நோக்குக. இன்று எருதுகள் நேராகச் செல்வதால் கவலையோட்டுதல் என்றும் கூறுவர். கமலை யேற்றத்தைக் கபிலை யேற்றம் என்று சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலி குறித் திருப்பது தவறாகும். கபிலை (வ.) யென்பது குரால் என்னும் ஆவகை. ஆவைக் கட்டி நீரிறைப்பது வழக்கத்திற்கு மாறாகும்.

விதைக் கென்று முதற் காய்ப்பையும் சிறந்த மணிகளையும் ஒதுக்கி வைத்தனர். அக்காலத்து உழவர் பொருளீட்டலைக் குறிக் கொள்ளாது, உணவு விளைத்தலையே குறிக்கொண்டு பதினெண் கூலங்களையும் அவற்றின் வகைகளையும், ஆண்டுதோறும் விளைத்து வந்தனர். நூற்றுக் கணக்கான நெல்வகைகள் விளைக்கப்பெற்றன. அவற்றுட் பெரும்பாலன வற்றை இன்று கண்ணாலும் காண முடியவில்லை; காதாலும் கேட்க முடியவில்லை. பொன்தினை, செந்தினை, கருந்தினை என்னும் மூவகையுள், இன்று பொன்றினையே காண முடிகின்றது. அவரைவகைகளுட் பல ஆண்டுதோறும் ஒவ்வொன்றாய் மறைந்து வருகின்றன. இன்று ஆட்சியை நடத்துபவருக்குப் பதவியைக் காக்க வேண்டு மென்பதேயன்றி, விதை வகைகளைப் பேணவேண்டு மென்னும் கலை நோக்கில்லை.

தமிழகத்தில் உழவுத் தொழிற்கு இன்றியமையாத் துணையாக, தொன்று தொட்டுப் பயன்பட்டுவரும் விலங்கு எருதாகும், ஏர்த் தொழிற்கு உதவுவதனால் காளை எருதெனப் பட்டது. ஏர் ஏர்து-எருது. காட்டு

-