உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

மாட்டைப் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கி ஏர்த் தொழிற்குப் பயன் படுத்தினர்.

எருதின் இன்றியமையாமை நோக்கியே ஏர்த் தொழிலைப் பகடு

என்றனர்.

"பகடு புறந் தருநர் பாரம் ஒம்பி”

"பகடு நடந்த கூழ்"

உழவுத் தொழிலும் பாண்டியம் எனப்பட்டது.

"பாண்டியஞ் செய்வான் பொருளினும்

பாண்டி எருது.

(புறம் 35)

(நாலடி.4)

(கலித். 136)

எருதுகளை நிறம் பற்றியும் திறம் பற்றியும் பலவகையாக வகுத்து, அவற்றுள் நால்வகையைச் சிறப்பாக இறக்க வரிசையில் எடுத்துக் கூறினர். அது "முழுப்புல்லை, முக்கால் மயிலை, அரைச் சிவப்பு. கால் கருப்பு;” எனப் பழமொழியாய் வழங்கி வருகின்றது.

பண்டையுழவர் எல்லாப் பயிர் பச்சைகளையும் பருவமறிந்தே விளைத்து வந்தனர். (“சித்திரைமாத வுழவு பத்தரை மாற்றுத் தங்கம்.” "பட்டந்தப்பினால் நட்டம்." "ஆடிப்பட்டம் தேடி விதை,” என்பன பிற்காலத்துப் பழமொழிகளாகும்.) மாரிக்கால வேளாண்மையைக் காலம் என்றும், வேனிற்கால வேளாண்மையைக் கோடை என்றும் கூறினர்.

இன்று நடைபெற்று வரும் வேளாண்மை வினைகள் பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பு தொட்டே பண்டாடு பழநடையாய் வருவனவாகும்.

காடு வெட்டிக் களப்புதல், கல் பொறுக்குதல், எரு விடுதல், ஆழவுதல், கட்டியடித்தல், பரம்படித்தல் (தாளியடித்தல், பல்லியாடுதல், ஊட்டித்தல், படலிழுத்தல்). புழுதியுணக்கல், விதைத்தல், களையெடுத்தல், காவல் காத்தல். அறுவடை செய்தல், களஞ்சேர்த்தல், சாணையடைதல் (சூடு போடுதல், போரமைத்தல்), சாணை பிரித்தல், காயப் போடுதல், பிணைய லடித்தல் (கடாவிடுதல், அதரி திரித்தல்), வைக்கோல் அல்லது சக்கை அல்லது கப்பி நீக்கல், பொலி தூற்றல், பொலியளத்தல், விதைக்கெடுத்தல், களஞ்சியஞ் சேர்த்தல் என்பன வானவாரிப் புதுக் கொல்லை வேளாண்மை வினைகளாம். காடு வெட்டிக் களப்புதல் புதுக்கொல்லைக்கே நிகழும்.

பழங்கொல்லையாயின், உரம்போடுதற்கு எருவிடுதலோடு கிடைய மர்த்தலும் குப்பையடித்தலும் நிகழும்.