உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

85

புன்செய் வேளாண்மையாயின், புழுதியுணக்கற்குப் பின்னும் களை யெடுத்தற்கு முன்னும், நாற்றுப் பாவல், பாத்தி பிடித்தல், நீர் பாய்ச்சி நடுதல் ஒன்றரைவாடம் நீர் பாய்ச்சல் ஆகிய வினைகள் நிகழும்.

நன்செய் வேளாண்மையாயின், நாற்றுப்பாவல், பாத்தி பிடித்தல், நீர் பாய்ச்சல் தொளி (சேறு) க்கலக்கல், குழை மிதித்தல், நடுதல் என்னும் வினைகளும், அவற்றிற்குப்பின் களையெடுத்தல் முதலிய வானவாரி வேளாண்மை வினைகளும், நிகழும்.

அகம், அகரம் = மருதநிலத்தூர். ஒ. நோ: L. agros, field. E. acre.

ஏர் - Eear, to plough. ME. eren. AS. erian. Ice. erja. Goth. arjan. L.arare. Gk. arow. I plough. Ir. araim. I plough E. arable = ploughable; earth = that which is ploughed. Root - ar

ஏர் என்னும் சொல் வடமொழியிலின்மை கவனிக்கத்தக்கது.

காறு (கொழு) - AS. scear, ME. schar,

Ger. schar, schaar, E. Share.

தொள் (தோண்டு) - E. till. AS. tilian,

ME. tilien, Du. telen,

தொள்-தொய். தொய்யளாவுலகம்=தொழில் அல்லது வினைசெய்யா

விண்ணுலகம்.

தொள்-தொழு-தொழில். உலக முதல் தொழில் உழவே.

கல் (தோண்டு) - L. colere, to till. கல் என்னும் வினையினின்று கல்வி என்னும் சொல் தோன்றியது போன்றே, colo என்னும் வினையினின்று culti- vation, culture என்னும் சொற்களும், ar (உழு) என்னும் வினையினின்று ars, artis (art) என்னும் சொற்களும், தோன்றியுள்ளன. உலக முதற் கல்வியும் உழவே புல்லம் (எருது) ME. bole, ON. boli, MLG., MDu. bulle. E.bull.

"புல்லமேறி தன்பூம்புகலியை”

2.நெசவு

நெய் - நெயவு = நெசவு.

(தேவா.76,11)

ஆடை நெசவைப் பற்றிய செய்திகளெல்லாம் முன்பு கூறப்பட்டன.

மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக.”