உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

என்று பரணர் பாடியிருப்பதாலும் (புறம். 145).

"புதையிருட் படாஅம் போக நீக்கி”

என்னும் சிலப்பதிகார அடிக்கு (5:4), "அல்லற்காலைப் பசந்துவாரப் பனித்துப் போர்த்த இருளாகிய படாத்தை” என்று அடியார்க்கு நல்லார் உரைவரைந் திருப்பதனாலும்.

66

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டும் நுண்வினைக் காருக ரிருக்கையும்”

என்பதால் (சிலப்.5:16-17), மயிர்நெசவும் கடைக்கழகக் காலத்திருந்தமை அறியப்படுவதாலும், படாம் என்பது சால்வை (shawl) என்னும் பாரசீகச் சொல்லாற் குறிக்கப் பெறும் மென்மயிர்ப் போர்வையாயிருக்கலாம்.

"கண்டங் குத்திய மண்டப எழினியும்"

“கழிப்பட மாடம் காலொடு துளங்க”

(2ýmfá. 37 : 103)

(உஞ்சைக். 44 : 42),

என்னும் பெருங்கதையடிகளும் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியென்னும் பெயரும் கொண்டு, கூடாரம் அமைத்தற்குரிய முரட்டுத் துணியும் நெய்யப்பட்டமையை உய்த்துணரலாம்.

திரையால் அமைக்கப்பட்ட மண்டபம் மண்டப எழினி.

படம் - துணி, மாடம் - மாடம் போல் உயர்ந்த கூடம். படமாடத்தைப் படமாளிகை, படமண்டபம் என்பதுமுண்டு. கூடாரம் கூடம் போல் உள்ள படமாடம், கூட ஆரம் - கூடவாரம் - கூடகாரம்-கூடாரம். 'ஆரம்' ஒர் ஈறு. எ-டு: கொட்டாரம், வட்டாரம், கடிகையாரம்-கடிகாரம்.

3.கம்மியம்

கருத்தல் செய்தல். இது வழக்கற்றுப் போன ஒரு தமிழ் வினைச்சொல்.

தமிழ் நாட்டிற் கருநிறமும் புகர் (brown) நிறமும் பொன்னிறமும் உள்ளவர் தொன்று தொட்டு இருந்து வருகின்றனர். பொன்னிறத்தைச் சிவப்பென்றும் வெள்ளையென்றும் சொல்வது வழக்கம். பொன்மை கருமை ஆகிய இருநிறம் பற்றியே, வெண்களமர் கருங்களமர். வெள்ளாளர், காராளர், வெள்ளொக்கலர், காரொக்கலர் என்னும் சொல்லிணைகள் எழுந்தன. காய்ப்பேறுமாறு வினை செய்யின் கருப்பர் அகங்கை கருப்பதும் சிவப்பர் அகங்கை சிவப்பதும் இயல்பு. இதுபற்றி வினைசெய்தலைக் குறிக்க, கருத்தல் செய்தல் என்னும் இரு சொற்கள் தோன்றின. கைகருக்குமா செய்வது கருத்தல்; சிவக்குமாறு செய்வது செய்தல்.

று