உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

87

கரு - கருமம் = செய்கை. கரு - கருவி = செய்கைக்கு வேண்டும் துணைப்பொருள். கரு - கரணம் = செய்கை, கருவி. 'அணம்' ஓர் ஈறு.

இனி, கருமைச் சொற்குப் பெருமைப் பொருளுமிருத்தலால், கருத்தல் = மிகுத்தல் என்றுமாம். புதிதாய்ச் செய்யப் பெறும் ஒரு பொருள் ஏற்கெனவேயுள்ள அதன் வகையை மிகுத்தல் காண்க. make என்னும் ஆங்கிலச் சொல்லையும் magnus (great) என்னும் இலத்தீன் சொல்லினின்று திரிப்பர் ஆங்கிலச் சொல்லாராய்ச்சியாளர். தன் வினையும் பிறவினைப் பொருள் பயப்பது சொல்லாக்க மரபிற் கொத்ததே.

ஒ.நோ: வெளுத்தல்

=

வெள்ளையாதல் (தன்வினை), வெள்ளையாக்குதல் (பிறவினை). 'வண்ணான் துணிகளை வெளுக்கிறான்' என்பதில் வெளுத்தல் வினை பிறவினையாயிருத்தல் காண்க.

கருமம் - கம்மம் = செய்கை. தொழில், கைத்தொழில் கொல் தொழில், கம்மியத் தொழில்.

கம்மம் = கம்மியத்தொழில்.

"கம்மஞ்செய் மாக்கள்”

கம்மம் - கமம்

(நாலடி.393)

இவ்விரு வடிவும் முதலில் தொழில் என்றே பொருள்பட்டன. உலகில் முதல் தோன்றிய தொழில் உழவே. தொழில், கை என்னும் தொழிற்பெயரும், செய், பண்ணை என்னும் நிலப் பெயரும் இதனை வலியுறுத்தும்.

தொள்-(தொளில்) - தொழில். தொள்ளுதல் தோண்டுதல்.

கை கையாற் செய்யும் செய்கை அல்லது தொழில், முதல் தொழிலான உழவு.

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்."

என்னும் திருக்குறளை (1035) நோக்குக.

கை என்பது செய்கையைக் குறித்தலாலேயே ஒரு தொழிற் பெயரீறாயிற்று. எ-டு: செய்கை, வருகை.

உழவு முதல் தொழிலானதினால், கம்மம், கமம் என்னும் இருவடிவும் முதலில் உழவைக் குறித்தன.

கம்மவாரு (தெ.), -கம்மவார் = தெலுங்கவுழவர்.