உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

89

என்னும் தொல்காப்பிய நூற்பாவில் (எழுத். 345) கன்னாரத் தொழில் குறிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் பாரதக் காலத்திற்கும் கடைக்கழகக் காலத்திற்கும் இடைப் பட்டவர்; பாணினிக்கு முந்தியவர்.

நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்

அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல."

என்பதில் (தொல். எழுத். 371) கொல்லத் தொழில் குறிக்கப்பட்டுளது.

நடைநவில் புரவியும் களிறும் தேரும்

தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய."

என்பது (தொல், மரபியல், 72), அரசன் ஏறிச்செல்லும் தேரையும்,

"தேரோர் தோற்றிய வென்றியும்"

என்பது (தொல். புறத். 21) தேர்ப் படையையும் குறித்தன.

"உலைக்கல் லன்ன பாறை யேறி”

66

பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்

(குறுந். 12: 1),

கருங்கைக் கொல்லன் இருப்புவிசைத் தெறிந்த கூடத் திண்ணிசை வெரீஇ”

(பெரும்பாண்.436-438).

66

நல்ல பெருந்தோ ளோயே கொல்லன் எறிபொற் பிதிரின் சிறுபல் காய்

வேங்கை வீயுகும்”

(நற்.13:5-7),

66

வன்புல மிறந்த பின்றை மென்றோல்

மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன

கவைத்தான் அலவன்”

(பெரும்பாண்.206-208),

66

இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை

.......

நல்லரா நடுங்க உரறிக் கொல்லன்

ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தகழும்"

(நற்.125:1-4),

கருங்கைக் கொல்லனை யிரக்கும்

திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே."

(புறம்.180:12-13),

என்னும் பகுதிகள், இற்றைக் கொல்லத் தொழில் நிலையே அன்று

மிருந்தமையைக் காட்டும்.