உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

66

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.”

(குறள். 505),

66

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு."

பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின்

புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்”

(குறள் 267),

(பெரும்பாண்.220-21),

66

சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும் பொன்னுரை காண்மரும்"

(மதுரை. 512-13),

66

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்கா சணிந்த அல்குல் ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ"

66

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்

புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்கல ஒருகா சேய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே."

(புறம்.353),

(குறுந்.67).

என்பவை பொற்கொல்லரின் பணியைக் குறிப்பன. குறுந்தொகைச் செய்யுளில், பொற்கொல்லன் புதுக்கம்பியிற் கோக்குமாறு தன் உகிரால் (நகத்தால்) பற்றியிருக்கும் உருண்டையான பொற்காசிற்கு, வேப்பம் பழத்தைக் கவ்விக் கொண்டிருக்கும் கிளிமூக்கை உவமங் கூறியிருப்பது, பாராட்டத்தக்கது.

தச்சு வேலையிற் சிறந்த வேலைப்பாடுள்ள செய் பொருள் தேராகும்.

எம்முளும் உளனொரு பொருநன் வைகல்

எண்டேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த காலன் னோனே."

என்பது தேர்த்தச்சனைக் குறித்தது.

(புறம்)

தச்சனை மரங்கொல் தச்சன் என்பது இலக்கிய வழக்கு. கொல்லுதல்

வெட்டுதல்.

66

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத் தற்றே"

(புறம்.206:11-12)

தச்சுவேலை பெரும்பாலும் பல பலகைகளையும் கால்களையும்

ஒன்றாகத் தைத்தலாதலால், அப்பெயர் பெற்றது. தைச்சு - தச்சு. தைத்தல் இணைத்தல் அல்லது பொருத்துதல்.