உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

91

“பலகை தைத்து” (பாரத. கிருட்டிண. 102). ஐகார முதற்சொல் அகர முதற் சொல்லாகத் திரிவது இயல்பே.

ஒ.நோ: ஐ - ஐந்து -அஞ்சு

மை - மைஞ்சு - மஞ்சு - முகில்.

-

பை - பைஞ்சு - பஞ்சு - பஞ்சி.

கைச்சாத்து - கச்சாத்து

ஆங்கிலத்திலும், தட்டுமுட்டுக்கள் செய்யும் தச்சனை joiner என்று கூறுதல் காண்க.

தச்சன் என்பது, வடமொழியில் தக்ஷ என்றும், கிரேக்கத்தில் tekton என்றும், திரியும். உண்மை இங்ஙனமிருப்பவும், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியைத் தொகுத்த பிராமணத் தமிழ்ப் புலவர் தக்ஷ என்னும் சொல்லினின்று தச்சன் என்பது வந்ததாகக் குறித்திருக்கின்றனர்.

பாண்டியன் தேவியின் வட்டக்கச்சைக் கட்டில், பின்வருமாறு யானை மருப்பினால் (தந்தத்தினால்) சிறந்த வேலைப்பாட்டுடன் செய்யப் பெற்றதாக, நெடுநெல் வாடை கூறுகின்றது.

,

நாற்பதாண்டு அகவையுள்ளதும், முரசுபோன்ற பெரிய கால்களையும் அழகிய புகர் நிறைந்த மத்தகத்தையும் உடையதும், போருக்குச் சிறந்த தென்று பெயர் பெற்றதும், போர் செய்து இறந்ததுமான, யானையின் தானே வீழ்ந்த கொம்பை இருபுறமும் கனமும் செம்மையும் ஒப்பச் செதுக்கி, கூரிய சிற்றுளியாலே பெரிய இலைத் தொழிலை இடையிலே அமைத்து; நிறை சூலியின் பால்கட்டிய மார்பு போலத் திரண்ட குடத்தையும், உள்ளிப் பூடு போன்ற கடைச்சலையும், கொண்ட கால்களைப் பொருத்தி; மூட்டுவாய் மாட்சிமைப்படத் தகடுகளை ஆணிகளால் தைத்து, அழகாகத் தொடுத்த முத்துக் குஞ்சங்களைச் சுற்றி வரத் தொங்க விட்டு; புலியின் வரியைக் கொண்ட பொலிவு பெற்ற கச்சாலே தகடுமறைய நடுவிடம் முழுதும் பின்னி; குற்றமற்றுப் பேரளவு கொண்டு பெரும் பெயர்பெற்ற வட்டக் கச்சைக் கட்டில்

66

தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள் இகல்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல் பொருதொழி நாகம் ஒழியெயி றருகெறிந்து சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் கூருளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டு